தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடி தபசு திருவிழாவில் முதல் நாளான இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்வதற்காக சங்கரநாராயணசாமி கோவிலுக்கு வருகை தந்தார். சங்கரலிங்க சுவாமி சன்னதி சங்கரநாராயண சுவாமி சன்னதி ஸ்ரீ கோமதி அம்பாள் சன்னதியில் வழிபாடு செய்தார் பின்பு சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலி தேவர் அறைக்கு சென்று வணங்கினார்.
பின்பு வெளியே வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஆடித்தபசு முதல் நாளில் இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். நேற்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நரேந்திர மோடி அவர்களுடன் தமிழ்நாட்டில் பெருமையை கலாச்சாரத்தையும் பராசையாற்றும் விதமாக பாதுகாக்க என்ற வகையில் ராஜராஜ சோழனுடைய மகன் ராஜேந்திர சோழனுடைய பெருமையை பெற்றுத்தந்தது போல பாரதப் பிரதமர் மோடி எடுத்துச் சென்று ராஜராஜ சோழனின் திருவுருவ சிலையை வைக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.
இரண்டு தினங்களாக வந்திருந்து விமான நிலைய விரிவாக்கம் செய்திருப்பது மகிழ்ச்சி பெரிய விஷயம்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையே என்பது குறித்த கேள்விக்கு, எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது தெரிந்திருந்தால் நான் நேரம் வாங்கி கொடுத்திருப்பேன். அவர்கள் கேட்டார்களா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது சொல்லி இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு கண்டிப்பாக நேரம் வாங்கி கொடுத்திருந்திருப்பேன்.
இதையும் படிங்க: மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளது.வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.பின்பு திமுக ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்து பேசினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி.. ஹேப்பி மோடில் எடப்பாடி..!