மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறையை தமிழக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் குரலெழுப்பி வருகின்றனர். இதற்கிடையே மும்மொழி கொள்கையை ஒதுபோதும் ஏற்கமாட்டோம் என கூறி முதலமைச்சர் ஸ்டாலினும் கூட்டணி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
அதேநேரம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற்று வரும் அண்ணாமலை மாவட்டங்களில் கூட்டம் போட்டு தமிழக அரசையும், திமுகவையும் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தென்காசி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த பொதுக்கூட்டம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ‘புதுவிதமான மனிதநேயமற்ற தண்டனைகள்’... பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் போலீஸார்..!
இதற்கான போஸ்டர்கள் அடித்தபோது அதில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகியான தொழிலதிபர் எஸ்வி கணேசன் பெயர் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த கணேசன், மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தான் பாஜக கட்சியில் இல்லை என்றும், சமத்துவ மக்கள் கட்சியில் மாநில பொறுப்பில் தான் இருந்த போது கட்சியை கலைத்த சரத்குமார் கட்சியை பாஜகவில் இணைப்பதாக கூறினார். அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதனால் கட்சியில் இருந்து விலகி தொழில் மட்டும் கல்வி சார்ந்த பணிகளில் இருப்பதாகவும், கட்சியில் இல்லாத தன் பெயரில் போஸ்டர் அடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பொதுக்கூட்டத்துக்காக பாஜக அடித்த போஸ்டரில் கட்சியில் இல்லாதவரின் பெயர் இடம்பெற்றிருப்பதும், அவர் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டிருப்பதும் சர்ச்சையாகியுள்ளது. கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் குறித்தே பாஜகவுக்கு தெரியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஏன் இவ்வளவு அக்கறை?... கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி...!