மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்று. இந்தக் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாப்பதும், கோவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதும் இந்து சமய அறநிலையத் துறையின் முக்கியப் பொறுப்பு. இத்தகைய பின்னணியில், கோவிலின் பல நூற்றாண்டு பழமையான அறக்கட்டளை சொத்துக்களில் ஒன்று முறைகேடாக தனியாருக்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலம் தொடர்பான இந்த முறைகேடு தொடர்பாக 19 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த விவகாரத்தின் தொடக்கம் 1930-ல் நடந்த ஒரு அறக்கட்டளையுடன் இணைந்துள்ளது. புதுக்கோட்டை ராஜகுமாரர் தக்ஷிணாமூர்த்தி துரைராஜா துரைராணி டிரஸ்ட் என்ற அந்த அறக்கட்டளை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோயில் ஆகியவற்றின் சேவைகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த டிரஸ்ட்டுக்கு சொந்தமான மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள அசோக விலாஸ் பங்களா மற்றும் அதை ஒட்டிய தோட்டம் ஆகியவை முக்கிய சொத்துகள். இந்த சொத்துக்களை வாடகைக்கு விடலாம் என்பதே விருப்பத்தின் விதி; அடகு வைக்கவோ, விற்கவோ அனுமதி இல்லை.

இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறக்கட்டளையின் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து முறைகேடு விவகாரத்தில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் இணை ஆணையரின் புகாரின் பேரில் 19 பேர் மீது மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்திருக்கிறது.
இதையும் படிங்க: சமணர் படுகையில் படுத்து ஆய்வு! மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விசிட்!
அதன் அடிப்படையில் 19 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளையின் சொத்து முறைகேடு விவகாரம் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மதுரை விமான நிலைய நில கையகப்படுத்துதலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: சின்ன உடைப்பு கிராமத்தில் மரத்தின் மீதேறி போராட்டம்!