தமிழ்நாடு அரசு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை முதன்மையாகக் கருதி, “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக, 34,809 நியாயவிலைக் கடைகள் மூலம் 15.81 லட்சம் குடும்ப அட்டைகளில் உள்ள 20.42 லட்சம் முதியவர்கள் மற்றும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21.70 லட்சம் பயனாளிகளுக்கு சேவையாற்றும் வகையில் இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு மற்றும் ePoS இயந்திரங்களுடன் கூடிய மூடிய வாகனங்களில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களை வழங்குவர்.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகிக்கப்படுகின்றன. இதனால், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ஒரே ஜெ. தான்! தம்பி போட்ட பதிவுக்கு பிரேமலதா விளக்கம்!
ஏற்கனவே அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் குற்றச்சாட்டி வருகிறார். இதனிடையே, இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக தாயுமானவர் திட்டத்தை தொடங்கியுள்ளதாக மார்த்தட்டி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார்.
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.அரியூர் பகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பயணத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது தேமுதிக நிர்வாகிகள் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களிடையே உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், எல்லோரும் டிவியில் பார்த்தீர்களா?, நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அது நம்முடைய கேப்டன் திட்டம். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கி வருகின்றனர். நம்மளுடைய கேப்டன் கனவு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என போட்டாரே ஒரு போடு, திமுக உடன்பிறப்புகள் இதைக் கேட்டு கதறி வருகிறார்களாம்.
இதையும் படிங்க: ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..!