விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியம், டாஸ்மார்க் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலங்களாக வழங்க கோரி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
நேற்று இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டம் முடிந்து சீமான் தனது காரில் சென்றபோது அருகிலுள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரங்கநாதன் திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சீமானிடம் பேச சென்றுள்ளார். அப்பொழுது சீமான் கட்சியை சேர்ந்த சிலர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனைப் பார்த்து காரில் இறங்கி வந்த சீமானும் தொண்டர்களுடன் கோதாவில் குதித்து தாக்க சென்றார். பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் காவல்துறையினர் இரு தரப்பையும் விலக்கி விட்டு, சீமானை காரில் அனுப்பி வைத்தனர். காயம்பட்ட ரங்கநாதனை சீமான் கட்சியினர் பிடித்து வைத்திருந்தனர். பின்னர் விருத்தாசலம் காவல்துறையினர் ரெங்கநாதனை மீட்டு விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து சீமான் கட்சியினர் விருத்தாசலம் புறவழிச் சாலையில் அமர்ந்து கட்சி ஒருங்கிணைப்பாளரை தவறாக பேசியவரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக பிரமுகர் சீமான் அவரது தாயைப் பற்றி இழிவாக பேசியதாகவும், சீமான் வாகனத்தை அடித்ததாகவும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகவும் கூறி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்திருந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீமானை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: களமாடத் தயார்... டிச.27ல் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்... சீமான் அறிவிப்பு...!
இந்நிலையில் திமுக பிரமுகர் ரங்கநாதன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொலை மிரட்டல், அவதூறாக பேசி தாக்குதல் போன்ற பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் ரங்கநாதன் மீது இரு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் காரணமாக விருத்தாச்சலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: “எனக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க... ஆனா...” - தமிழக மக்களை எச்சரித்த சீமான்...!