தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தக் கேள்விக்குறிய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சமூக ரீதியில் அக்கறை கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெகவின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து, அன்புமணி ராமதாஸின் கடிதத்தை இன்று பாமகவின் சார்பில் வழங்கினர்.
செய்தியாளர்களைச் சந்தித்த பாமகவின் முக்கிய நிர்வாகி வழக்கறிஞர் பாலு, "சமூக நீதி என்பது தந்தை பெரியார் மண், திராவிட இயக்கம்தான் சத்துணவு நீதிக்கு முழு மூச்சாகச் செயல்படக்கூடிய அமைப்பு என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் தந்தை பெரியார் சொன்ன தலையாய இட ஒதுக்கீடான சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில், 'எங்களால் நடத்த முடியாது, எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்று சொல்கிறார். இது முழுப் பொய்," என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்... தேர்தலில் போட்டியிட விருப்ப மனு... அன்புமணி முக்கிய அறிவிப்பு...!
"அப்படி ஒரு நிலைப்பாட்டைத் தமிழக முதலமைச்சர் எடுத்திருந்தால், தந்தை பெரியார் உயிரோடு இருந்தால் இருக்க மாட்டார்," என்று பாலு ஆவேசப்பட்டார். தவறான ஆலோசனை மற்றும் புரிதலின் அடிப்படையில் இந்தத் தருணத்தில் முதலமைச்சர் இவ்வாறு பேசியிருப்பதாகக் கூறிய அவர், பிகார், கர்நாடகா, தெலுங்கானா போன்ற பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இது நடத்தப்படாமல் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறக்கூடிய இந்த முக்கியப் போராட்டத்திற்குக் குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக தி.மு.க.வை எதிர்ப்பதாகவும், ஆனால் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் பாலு, "தவெக இயக்கம் ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கங்களுக்கு எல்லாம் பாடம் சொல்லும் வகையில் அவருடைய கருத்து இருக்கிறது. எனவே, இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்," என்றார்.
"தி.மு.க.விற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. எனவே அவர்களைத் தவிர, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்குக் கூட நாங்கள் அழைப்பு விடுத்திருக்கிறோம்," என்று அவர் நக்கலாகப் பேசினார்.
இந்த அழைப்பு போராட்டத்திற்கான அழைப்பு மட்டுமே என்றும், மற்றபடி அரசியலுக்காகவோ, யாருடன் யார் சேர்கிறார்கள், கூட்டணி குறித்தோ தலைவர்கள் முடிவெடுப்பார்கள்; அதற்கான தருணம் இதுவல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: அன்புமணி தான் தலைவர்..!! ராமதாஸுக்கு பறந்த கடிதம்..!! அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்..!!