சென்னை புழல், கோவை மத்திய சிறை மற்றும் தேனி தேக்கம்பட்டி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தடுத்து கைதிகள் தப்பிச் செல்வது சிறைத் துறையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார். சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத கவனமாகவும் விழிப்புடனும் சிறைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்த அவர், பணியில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கறார் வார்னிங் பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே புழல் சிறையில் இருந்து மற்றொரு கைதி தப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அருகே வசித்து வரும் 60 வயதான ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சன், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று காலையில் பள்ளியில் விட்டுவிட்டு, மீண்டும் மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: கொலை செய்யணுமா..?? இதுதான் நம்பர்..!! சென்னை மாநகர பஸ்சில் ஹிண்ட் கொடுத்த ரவுடி கைது!!
இந்த நிலையில், வழக்கம்போல் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, 8 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சனைத் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், சிறுமியின் தந்தை இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காயங்களுடன் இருந்த ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சனை காவல்துறையினர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை காவல்துறையினர் அசந்திருந்த நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புழல் காவல்துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தது தொடர்பாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Viralvideo பார்க்கவே பயங்கரமா இருக்கே... சுனாமி போல் வந்த ராட்சத பேரலை... எண்ணூரை தெறிக்க விட்ட அர்னாப் புயல்...!