தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்6 ஏப்ரல் 2026 ஆகும். மேலும் வேட்புமனு பரிசீலனை 7 ஏப்ரல் நடைபெற உள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9ஏப்ரல் ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை ஆயிரத்து 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 30 ஆம் தேதியே முதவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், நாதக சீமான் காரைக்குடி தொகுதியிலும், சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் என அடுத்தடுத்து வேட்புமனுத்தாக்கலை செய்துள்ளனர்.
நாளை ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால், திங்கட்கிழமை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவும், எதிர்க்கட்சி அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகின்றன.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார் வேட்பு மனுத்தாக்கல்... சாலையை அடைத்து ஒரு படையே சென்றதால் மக்கள் அவதி..!
அந்த வகையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ இன்று தனது ஆதரவாளர்கள் படை சூழ தேர்தல் நடத்தும் அலுவலரான சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய வந்தார்.
அவருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உடன் வந்தனர். ஆனால் ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் அலுவலகத்தின் நுழைவாயில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் அன்டோ ஆரோக்கியராஜ் அதிமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தினார்.
அப்போது தொண்டர்கள் முண்டியடித்து உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு அதிமுகவினரை வெளியே தள்ளி போலீசார் கதவை மூடினர்.
இந்த இடிபாடுகளுக்குள் வேட்பாளர் இசக்கி சுப்பையா சிகிக்கொண்டார். அவரை மீட்டு உள்ளே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தாவிடம் இசக்கி சுப்பையா மனுத்தாக்கல் செய்ய உள்ளார்..
இதையும் படிங்க: பாட்ஷா படத்தில் ரஜினியுடன் வரும் நாயும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணு... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு...!