தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரிசி கொள்முதலில் முறைகேடு என கிரண்பேடி கூறியதாகவும் ரேஷன் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக சம்பளம் அளிக்கவில்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் 20 ஆண்டுகளுக்கு முன்பே புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று அறிக்கை கொடுத்தும் என் நடவடிக்கை இல்லை என்று கேட்டுள்ளார்.
உங்கள் விஜய்க்கு ஓட்டு போடுவதாக நினைத்து வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். உங்கள் தேவைகள் நிறைவேற தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்றும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் விஜய் கைகூப்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார். இந்த விஜய் உங்களுக்கு துணையாக இருப்பார் என்றும் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி தான் அமையும் என்றும் புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிதான் அமையும் எனவும் தெரிவித்தார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைய எங்கள் சின்னம், உங்கள் சின்னம் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் ஒருவிரல் புரட்சியான விசில் புரட்சியை உருவாக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நான் தன்னந்தனி ஆளு… நீ ஏளனமா பாரு.. மிரள போகுது ஸ்டேட்டு.. விசில் சத்தம் கேட்டு… விசில் அடிக்க ரெடியா என்று பாடி விஜய் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதிகளை விஜய் எடுத்துரைத்தார். துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து பெற 100% முயற்சிப்போம் என்றும் 25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ன ஆச்சு..? குழம்பிப்போன கூட்டணியை விட்டு தள்ளுங்க..! விஜய் ON FIRE..!!
அனைத்து அரசு வேலைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும்100% பயிர் காப்பீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மீன் பிடித்துச் செல்வோருக்கு லிட்டருக்கு 20 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், புதுச்சேரி யுனிவர்சிட்டி உருவாக்கப்படும் என்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் 22 சதவீதம் வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: கண்ட்ரோல் இல்ல... புதுவை எல்லையில் குவிந்த TVK தொண்டர்கள்... போலீசார் தடியடி..!!