தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களத்தில் பெரும் சூட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் காலியாகின.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் இந்த இரு தொகுதிகளிலும் அவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தது. மதுராந்தகம் தனித் தொகுதியில் மரகதம் குமரவேல் தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இந்தப் பின்னணியில் மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் நேரடியாக பரப்புரையில் இறங்கியுள்ளார். ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இன்று இப்பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் மக்களே என்று கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். உங்க வீட்டு அண்ணனாக உங்க வீட்டு தம்பியாக உங்கள் பிள்ளையாக வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார். திமுகவை தீய சக்தி என்ற விமர்சித்தார். உங்கள் விஜய் முதல்வராக கூடாதா என்று கேட்டார். நாட்டில் ஒரே ஆபாச நதி ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதாவை தவறாக பேசியவர்களுடன் கூட்டு வைக்க நினைத்தபோது முகத்திரை கிழிந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை... அரங்கம் அதிர உற்சாக வரவேற்பு..!! விழாக்கோலம் பூண்டது மதுராந்தகம்..!
உங்களுக்கு விமர்சனப்படி அரசியலுக்கு புதிதாக வந்த குழந்தை தமிழக வெற்றி கழகம் என்றும் இன்ஸ்பெக்ஷனுக்கு சென்றால் நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று சூட்டிங் எடுக்கிறார் விஜய் என்று விமர்சிக்கிறார் ஸ்டாலின் எனவும் கூறினார். தோற்றாலும் ஜெயித்தாலும் ஸ்டாலின் தான் என் அங்கிள் என்றும் அவர் என்னுடைய ஸ்வீட் அங்கிள் தான் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: கேட்க ஆளில்லைன்னு ஆடுறீங்களா? - சி.எம். விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்... தவெகவுக்கு விட்ட சவால்...!