தமிழ்நாடு நாள் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளத்தையும், தமிழர்களின் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றையும் நினைவுகூரும் முக்கியமான நாள். 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு, ஜூலை 18-ஐ தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், அப்போதைய முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை, "மெட்ராஸ் மாநிலம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றும் தீர்மானத்தை முன்வைத்தார்.
அந்தத் தீர்மானம் 1967 ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் நினைவாகவே ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 18, 2026
இந்நாளில் தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் சிறப்பு விழாக்கள், தமிழ் மொழி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள். பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டிகள்.கலைநிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள். தமிழறிஞர்கள் மற்றும் சிறந்த ஆளுமைகளுக்கு பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைத் தொகுப்பு..! தலைமைச் செயலகத்தில் விஜய் - வைகோ சந்திப்பு..!
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
இதையும் படிங்க: டாஸ்மாக்..! இரட்டை நிலைப்பாடு ஏன்.? சொல்லுங்க CM..! வேல்முருகன் தாக்கு.!