டெல்லி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு இன்னும் நாட்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 17) மாலை 4 மணிக்கு டெல்லியின் இந்திரா பவனில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சம், திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்து செல்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் புதிய கூட்டணி அமைத்து மாற்று அரசியல் செய்வதா என்பது குறித்து முடிவெடுப்பது. தவெக கட்சி தொடங்கிய பிறகு, காங்கிரஸ் தொண்டர்களிடையே திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இன்றைய கூட்டம் தமிழக அரசியலுக்கு திருப்புமுனையாக அமையலாம்.
இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியிருப்பதாவது: இன்று காலை மதுரையில் இருந்து புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக ..
இதையும் படிங்க: திமுக வேணவே வேணாம்! விஜய் கூட பரவாயில்லை!! ராகுல்காந்திக்கு காங்கிரசார் எழுதிய கடிதம்!
இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.
எனக்காக அல்ல..🙂
என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக ..
அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..
இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..
நம் உரிமையை…
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 17, 2026
அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோழ் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்.
மாணிக்கம் தாகூரின் இந்த பதிவு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. 'மதவெறி கும்மல்' என்று அவர் குறிப்பிடுவது பாஜகவை குறிக்கலாம் எனவும், தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பது கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே தவெக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இன்றைய கூட்டத்தின் முடிவு தமிழக அரசியல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி மற்றும் கார்கேவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி!! ராகுல் காந்தி முடிவு என்ன? டெல்லியில் இன்று ஆலோசனை!