தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனே விடுவிக்க கோரி இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலிடம் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலமாக அவரிடம் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
2024-2025 கல்வி ஆண்டுக்கான தமிழகத்திற்கு தரவேண்டிய சமக்ரா சிக்சா' கல்வி நிதியான 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அத்தகைய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதால் 43 லட்சம் மாணவர்கள் 2.2 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை விடுவிக்க கோரி திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று மதியம் மத்திய அரசை கண்டித்து காலைவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதையும் படிங்க: பாஜகவிற்கு மரண அடி... பீகார் மண்ணில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை...!
இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வரும் அவரிடம் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தொலைபேசி மூலமாக பேசி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று நடிகர் பிரகாஷ் ராஜ் திரைப்பட இயக்குனர் கோபி.நயினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் அவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனி விமானத்தில் பீகார் பறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... இன்று ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம்...!