திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திருநாவுக்கரசு வாணியம்பாடியில் கட்சி நிர்வாகி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். 150 ஆண்டுகளாக பயணிக்க கூடிய காங்கிரஸ் கட்சி இல்லாத இடமே இல்லை. சிறுபான்மை மக்கள் அதிகம் வாழக்கூடிய இடத்தில் பிஜேபி இல்லாமல் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இல்லாத இடம் இல்லை. தொடக்க காலத்தில் திமுக காங்கிரஸ் கட்சியை எதிர்த்தது, இதே போன்று திமுகவை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வந்தது. அந்த காலகட்டத்தில் நடந்த தகவலை தற்பொழுது செய்தியாக வெளியிட்டு வருவது சரியில்லை.
பாஜக மற்றும் அதிமுக கட்சிக்கு இடையே முற்றுப்பெறாத கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார் நான்தான் முதலமைச்சர் என கூறி வருகிறார். அப்போது சீமான் கட்சி ஆரம்பிக்கும் போது நான்தான் முதலமைச்சர் என கூறினார் ஆசைப்படுவது நியாயம் தான் ஆனால் முதலமைச்சர் ஆவது என்பது மக்களுடைய எதிர்பார்ப்பில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு சில குற்ற செயல்கள் நடந்து தான் வருகிறது. அதற்காக முதலமைச்சரின் கீழ் செயல்படும் காவல்துறை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் என்பது தவிர்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் கூட்டணி கட்சி வரக்கூடியவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் திருமணம் முடிந்து இணைந்து உள்ளோம், திருமணம் ஆகாதவர்களிடம் கூறினால் அதை பற்றி யோசிப்பார்கள். அதற்கான வாய்ப்பு இல்லை என கூறினார். பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் வேண்டுமானால் குழப்பம் உள்ளது. திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகவினுடைய தலைமையில் ஆட்சியா அல்லது பிஜேபினுடைய தலைமையில் ஆட்சியா என்ற குழப்பம் அங்கு உள்ளது இங்கு நாங்கள் கூட்டணி கட்சியில் உள்ளோம் எங்களுக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்.
இதையும் படிங்க: சி.எம். பதவி என்ன கருணாநிதி குடும்ப சொத்தா?... திமுகவை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
ஆட்சியில் பங்கு வேண்டும் என நாங்கள் கூட்டணி உள்ளவர்கள் கேட்கவில்லை. எங்களுக்கான இட ஒதுக்கீடு கூடுதலாக வேண்டும் என தான் கேட்டு உள்ளமை தவிர ஆட்சியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் எங்கள் கூட்டணியில் யாரும் கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்காக ஆசைப்படுகிறார் நாங்கள் ஆசைப்படவில்லை.
எங்கள் கூட்டணியில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு செய்து விட்டோம். திமுக உடைய கூட்டணியில் ஆட்சியில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணி என எந்த கட்சியுமே சொல்லவில்லை. எண்ணிக்கையில் கூடுதலா வேண்டும் என்பதில் ஆசைப்படுவதில் கூட்டணி இருக்கக்கூடியவர்கள் சொல்வதில் தவறு எதுவுமே இல்லை. தமிழகத்தை பொறுத்த மட்டும் திமுக பெரும்பான்மை ஆக உள்ளது அதனால் அதிகளவில் போட்டியிடுகிறார்கள் நாங்கள் குறைந்த இடங்களை கேட்டு போட்டியிடுகின்றோம்.. அதுதான் உண்மை என்றார்.
இதையும் படிங்க: அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!