நாங்கள் நடத்துகிறப்போர் தர்மத்தை காப்பதற்கான போர், தமிழ்நாட்டை காப்பதற்கான போர், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் வேண்டும் என்பதற்கான போர் என ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஆ -மகாராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்*.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 234 தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது, ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுகிற போது அனைத்து தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் காப்பு தொகையை இழக்க வேண்டுமா வேண்டாமா , இழக்க வேண்டும் அது தான் முழுமையான வெற்றி அது தான் எனது வேண்டுகோள் என்றும் பேசினார்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஆ -மகாராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார் . பிரச்சாரத்தின் போது பேசிய அவர்: மகாபாரதத்தில் வரும் சகுனி துரியோதனனோடு நட்பாக பழகுவதை போல பழகி அவன் படையையும் அளித்தான், இவன் படையையும் அழித்தான். அந்த சகுனிக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, அந்த சகுனிக்கும் பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.அந்த சகுனி தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கிறது. அந்த சகுனியை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம் என்றார்.
இதையும் படிங்க: உலகிலேயே நம்பர் 1!! மீண்டும் சாதித்த மோடி!! பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 2ம் ஆண்டாக முதலிடம்!
நாங்கள் நடத்துகிறப்போர் தர்மத்தை காப்பதற்கான போர், தமிழ்நாட்டை காப்பதற்கான போர், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் வேண்டும் என்பதற்கான போர் என்றார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 234 தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது, ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுகிற போது அனைத்து தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் காப்பு தொகையை இழக்க வேண்டுமா வேண்டாமா , இழக்க வேண்டும். அது தான் முழுமையான வெற்றி. அது தான் எனது வேண்டுகோள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!