தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக.வினரை பொய் வழக்கில் கைது செய்து, தமிழக வெற்றி கழகத்தில் சேர மிரட்டியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு.
இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் சேலை மற்றும் காமாட்சி விளக்கு வழங்குவதாக புகார் தெரிவித்துள்ள திமுக, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தாராபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன்,
மூலனூர் நத்தப்பாளையம் முளையாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு தவெக.வினர் சேலை வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி... மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்... விசில் சின்னத்திற்கு ஸ்பெஷல் அடையாளமா?
மானுர்பாளையத்தில் காமாட்சி விளக்கு கொடுத்துள்ளனர். திமுக சார்பில் இது்தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளோம்.்தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் குதிரை பேரத்திற்கு ஆட்பட்டு பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.வில் இணைந்த சத்தியபாமா மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். அவருக்கு கடும் எதிர்ப்பு கிராம மக்கள் தெரிவித்தனர். கடந்த 26.ம் தேதி பொட்டிக்காம்பாளையத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அதனை செல்போனில் படம் எடுத்தவர்களையும் அங்கு பிரசாரத்தில் இருந்த திமுகவினரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை மிரட்டி தவெக.வில் சேர மிரட்டி உள்ளனர். பல மணி நேரம் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டியும் திமுக.வினர் சேர மறுத்ததால்
5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
இதே வழக்கில், அசோக் என்பவரை மிரட்டி அதிமுக.வில் இருந்து அவரை தவெக.வில் இணைந்துள்ளார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள அவரை வைத்தே முதலமைச்சருக்கு மாட்டு்வண்டி ஓட்டி உள்ளனர்.
அமைச்சர்கள் அறிவுறுத்தலின் பேரில் போலீசார் துணையுடன் இத்தகைய மிரட்டல்களை தமிழக வெற்றி கழகத்தினர் செய்துள்ளனர்..3.ம் தேதி எதிர்கட்சி்தலைவர் பிரசாரத்தில் பேச வேண்டும் என ஆர்வமுடன் வந்து சிறுவன் பேசியதற்கு அதை புகாராக எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்..
ஆனால், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா 25 குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்தார். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.
இதையும் படிங்க: தவெகவில் இணைந்ததையே படு கொச்சையாக விமர்சித்த சத்யபாமா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!