பெத்த தாய்க்கும் தந்தைக்கும் துரோகம் செய்தவன் உற்ப்பட்டதாக சரித்திரம் கிடையாது எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்த யாரும் நல்ல விதமாக வாழ முடியாது என பேசி கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் நாகல் நகரில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:- கடவுளுக்கு அடுத்தபடியாக எல்லாரையும் ஜெயிக்க வைக்க முடியும் என சொன்னார் முதலமைச்சர் விஜய். அதை நம்பி அனைவரும் ராஜினாமா செய்து விட்டார்கள்.
ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, கட்சி கொரடா கட்டுப்பாட்டை மீறக்கூடாது.
சட்டமன்றத்தில் கட்சிக் கட்டுப்பாட்டுப்படி தான் வாக்களிக்க வேண்டும் அதை மீறியவர்கள் பாதிப்பேர் ராஜினாமா செய்து விட்டார்கள் மீதமுள்ள நாலு பேர் ராஜினாமா செய்யாமல் உள்ளனர் ராஜினாமா செய்தார் எம்எல்ஏ பதவி கிடையாது ராஜினாமா செய்யாமல் எம்எல்ஏ பதவியை தக்க வைக்க வேண்டும் என சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகரன், அன்பழகன், ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!
நான்கு பேரும் உடனடியாக பொதுக்குழுவை செயற்குழு கூட்ட வேண்டும் என கூறுகின்றனர் ஆனால் சட்டப்படி தான் திட்டமிடப்பட்டு தான் பொதுக்குழுவை செயற்குழுவை கூட்ட முடியும்.
இந்த ஆர்ப்பாட்டம் தலைமைக் கழக உத்தரவின்படி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது ராமநாதபுரத்திற்கு நத்தம் விசுவநாதனை தலைமை தாங்க வேண்டும் என கூறினார்கள் வேலுமணியை தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்க வேண்டும் என கூறினார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் பதவி கொடுத்தால் மட்டுமே இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம் என நத்தம் விஸ்வநாதனும் வேலுமணி கூறி உள்ளனர் ஆனால் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சிக்கு எங்களது ஆதரவு உண்டு எனக் கூறுகிறார்கள்.
எடப்பாடியின் வளர்ச்சியை இவர்களால் தடுக்க முடியாது. அண்ணா திமுகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. எம்ஜிஆர் காலத்தில் இதுபோல் பேசியவர்களை அவர் கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதா காலத்தில் இதுபோல் பேசியிருந்தால் எத்தனை சவுக்கடி என்னென்ன நடக்கும் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும் பெருந்தன்மையின் உருவமாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி மன்னித்து எம்எல்ஏவாக தொடரட்டும் என கடிதம் கொடுத்து விட்டார்.
அம்மா போட்ட பிச்சை எம்ஜிஆர் போட்ட பிச்சை எடப்பாடி யார் போட்ட பிச்சையின் காரணமாகத்தான் சீனிவாசனுக்கு மரியாதை கிடைக்கின்றது.
கேவலம் மந்திரி பதவிக்காக வயது குறைந்தவர்களுடன் சேர்ந்து கொண்டு அறிக்கை கொடுத்து கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னால் அரசியல் ஆண்மை நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம், வேலுமணி இவர்களுக்கெல்லாம் இருந்தால் எங்கள் சொந்த செல்வாக்கில் தான் ஜெயித்தோம் என்று சொன்னால் மரியாதையாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் சிந்தியுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களது கால்களில் நாங்கள் அனைவரும் விழுகின்றோம் லாரியில் வந்து காலில் விழுகின்றோம்.
47 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று உள்ளனர் இதற்குக் காரணம் நூற்றுக்கு நூறு எடப்பாடி பழனிச்சாமி தான். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 60 பேர் தோல்வியை தழுவி உள்ளனர். 60 பேர் வெற்றி பெற்றிருந்தால் அதிமுக ஆட்சி அமைப்பது எந்த கொம்பனாலும் தடுத்திருக்க முடியாது.
சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியில் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் அவர்கள் இருவரையும் தலைவராக வைத்து நீங்கள் கட்சி ஆரம்பித்து நடத்துங்கள்.
உங்கள் அரசியல் ஆண்மையை காட்டுங்கள், அரசியல் ஆண்மை இருந்தால் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் தலைமை ஏற்று புது கட்சி ஆரம்பியுங்கள் மீசை உள்ள ஆம்பளையாக இருந்தால் புது கட்சி ஆரம்பிங்கள்.
இதையும் படிங்க: கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!