தேமுதிக சார்பில் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்திற்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு சிலம்பம், வீர வாள் போன்றவற்றை பரிசாக வழங்கினர் .
பின்னர் பொதுக்கூட்டதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களிடம் இருந்து பணம் பெற்று, கட்டப்பஞ்சாயத்து செய்து வசூல் செய்கிற கட்சி தேமுதிக கிடையாது. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கொண்ட கேப்டன் போல் தேமுதிக தொண்டர்கள் செயல்படுகின்றனர்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் மீண்டும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்... நயினார் நாகேந்திரன் சொன்ன 'நறுக்' அப்டேட்...!
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு இணையாக தேமுதிக தமிழகத்தில் பூத் கமிட்டி அமைத்து வருகிறது. தேமுதிக நிறைகுடம் எந்த சலசலப்புக்கும் அடங்காது, தேமுதிக யாருடன் கூட்டணி என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தேமுதிக அமைக்கும் கூட்டணி தமிழகத்தை நிச்சயமாக முன்னேற்றும்.
2026 தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கின்றதோ அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கு முடியும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைபாடு என்ன என்பது கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தெரிவிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், போடிநாயக்கனூர் சட்டமன்ற அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் போடி எம்.எல்.ஏ யார் என்று தொண்டர்களிடம் கேட்டார். அதற்கு கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ் என்று சொன்னவுடன் ஏன் பூட்டின கதவுகள் திறக்கப்படவில்லையா? என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன் சட்டமன்ற அலுவலகம திறக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வைகோவுக்கு இப்படியொரு நிலை வரணுமா? - 14 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்...!