சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் திமுக ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போனதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
சம்பவம் நடந்தது வேளச்சேரி நூறடி சாலை பகுதியில். அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அந்த மூதாட்டி, பிரியாணி கடையில் வேலை செய்யும் ஒருவரால் பின் தொடரப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் ஐந்து பேர் ஈடுபட்ட இந்தக் கொடூரத்தில், மூதாட்டி ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது.

வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதுவரை இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மீதமுள்ள மூன்று பேரை தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அடுத்த இடி..! திமுகவில் புதிய இன்னிங்ஸை தொடங்கிய EX. MLA.. !
இதனிடையே தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக திமுக கண்டித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. Sofa model ஆட்சி நடத்தும் Dummy முதல்வரே.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா என்று கேட்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பெருந்துறையில் பலம் இழக்கும் திராவிட கட்சிகள்! அதிமுக கோட்டை பெரிய ஓட்டை! தவெகவுக்கு வாய்ப்பு!