விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரகண்டநல்லூர் பேரூராட்சியில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தினை 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கமாக அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு சிறிய விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
பின்னர் மேடையில் பேசிய பொன்முடி; மாணவர்கள் படிப்பிலும் கவனம் வேண்டும் அதே போன்று விளையாட்டிலும் கவனம் வேண்டும் அந்தவகையில் தமிழ்நாடு துணை முதல்வர் இன்றைய இளைஞர்களை ஈட்டி முனையாக தீட்டி வருகிறார். இந்த நான்கு ஆண்டுகளில் 4617 விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. அதே போல் விளையாட்டு துறைக்காக 1945 கோடியும் குறிப்பாக உட்கட்டமைப்புகாக மட்டும் 601கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் கடந்த நான்காண்டுகளில் மூன்று இன்டர்நேஷனல் விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தவெக புதுச்சேரி கூட்டம் குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் மீட்டிங் நடத்துவதற்கு அனுமதி உண்டு. ஆனால் வெற்றி பெறப்போவது திமுக தான் விழுப்புரத்திற்கு வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்கள் பட்டாலும் எழுச்சியாக வரவேற்பு தந்தனர். எனவே மீண்டும் 2026 திமுக ஆட்சி தான் வரும் என கூறினார்.
இதையும் படிங்க: “ஆண்டவனே வந்தாலும் நடக்காது”... செங்கோட்டையன் தவெகவில் இணைய காரணம் இதுதான்... திமுக முக்கிய புள்ளி சொன்ன தகவல்...!
திருப்பரங்குன்றம் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யாரின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, அவர் எடப்பாடி அல்ல துதி பாடி அமித்ஷாவுக்கும் RSS-க்கும் பிஜேபிக்கும் துதி பாடுகிறார் அவர் எடப்பாடி அல்ல துதி பாடி என விமர்சனம் செய்தார்.
ஆட்சி செய்தவர்களே தான் மீண்டும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்று செங்கோட்டையனின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழகத்திலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். குறிப்பாக இளைஞர்களுக்கும் பெண்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு என பல்வேறு திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். அவர் உறங்குவதை நான் பார்த்ததே இல்லை உறங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அதேபோலத்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் இளைஞர் அமைச்சருமான உதயநிதியும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிடுகிறார், துவக்கி வைக்கிறார். எனவே இந்த அளவிற்கு மக்களுக்கு திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் தான் மீண்டும் 2026 முதலமைச்சர் ஆவார் என்றார்.
இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான பொன். கவுதம சிகாமணி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: “நாங்க மட சாம்பிராணியா இருக்கோம்...” - மதுரை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடி... செல்லூர் ராஜூ ஆவேசம்...!