அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் பிரச்சார இயக்கத்தையே திமுக நடத்தி வருகிறது. 45 நாட்களுக்குள் வீடு வீடாக சென்று திமுக அரசினுடைய திட்டங்களை சொல்லி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
அதேபோல் ‘உடன்பிறப்பே வா’ என்று நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஒன் டூ ஒன் ஆலோசனை கூட்டத்தையும் முதலமைச்சர் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி பணிகள், கட்சி நிர்வாகிகளுடைய செயல்பாடுகள் குறித்தெல்லாம் கருத்துக்களை கேட்டு வரக்கூடிய நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் திடீரென மாற்றப்பட்டார். குறிப்பாக உறுப்பினர் சேர்க்கை பூத் கமிட்டியுடைய பணிகள், கட்சி பணிகளில் சுணக்கமாக செயல்பட்டது தான் இதற்கு காரணமாக கூறப்பட்டது.
இதனிடையே, திமுக உடன் பிறப்புகளுடன் ஒற்றுமையாக இருந்து இணைந்து செயல்படாமல் உட்கட்சி பிரச்சனையில் ஈடுபடக்கூடிய மாவட்ட செயலருடைய பட்டியலை திமுக தலைமை சேகரித்திருக்கிறது. ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதாவது ஒற்றுமையாக இல்லாமல் உட்கட்சி பிரச்சினையில் யாராவது கோஷ்டி அரசியல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மேலும் சில மாவட்ட செயலாளர்களை இன்னும் சில நாட்களில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: மக்கள் எல்லாரும் ஓரணி.. திமுக தான் வேற அணி! உங்கள மாதிரி பிச்சை எடுக்கிறோமோ? சரமாரியாக பேசிய எடப்பாடி..!
குறிப்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தாத சில மாவட்ட செயலருடைய புகார்கள் எல்லாம் தலைமைக்கு வந்திருக்கிறது. முறையாக செயல்படாமல், உறுப்பினர் சேர்க்கையை சரிவர செய்யாமல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எல்லாம் திமுக தலைமைக்கு வந்திருப்பதாகவும் அந்த மாவட்ட செயலாளர்கள் சிலரை சில தினங்களில் மாற்றம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: காத்துல கூட கரப்ஷன்..! பரபரக்கும் அரசியல் களம்.. பட்டைய கிளப்பும் இபிஎஸ்..!