நடக்காது , நிறைவேற்ற முடியாது என்று கூறிய மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றி அதிமுக, பாஜகவினர் முகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கரி பூசியுள்ளார் என அமைச்சர் ராஜேந்திரன் கருத்து
சேலம் மாவட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்க துவக்க விழா நேரு கலையரங்கில் நடந்தது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு் கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட 83,241 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கினார். இதன்மூலம் தற்போது சேலம் மாவட்டத்தில் 6 லட்சத்து 32 ஆயிரத்து 509 பேர் மகளிர் உரிமைத்தாகை பெறுகின்றனர்.
விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை மகுடத்தில் வைரக்கல் பதிக்கும் வகையில், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் சமூக, பொருளாதாரத்தை காக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையை முதல்வர் வழங்குகிறார். இதுவரையில் மாநிலம் முழுவதும் 1.16 கோடி மகளிருக்கு ரூ.30 ஆயிரத்து 838 கோடி ரூபாய் , மகளிர் உரிமைத்தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது எங்க கோட்டை... அதிமுகவிடம் 70 தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்த BJP...! குழப்பத்தில் இபிஎஸ்...!
தற்போது கூடுதலாக 17 லட்சம் பெண்கள், இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறுகின்றனர்.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் இத்திட்டத்தை எப்படி நிறுத்தலாம் என சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இந்திய துணை கண்டத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பெண்களிடம் பொருளாதார முன்னேற்றத்திற்கு இத்திட்டம் வழிவகுத்துள்ளது. மகளிர், 70 சதவீதம் கடன் வாங்கும் நிகழ்வு குறைந்துள்ளது. இத்திட்டம் பற்றி அவதூறு பரப்பிய அதிமுக, பாஜக வின் முயற்சி தடுக்கப்பட்டு, அவர்கள் தோற்று போயுள்ளார்கள்.
ஆரம்பத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என திமுக கூறியபோது, இது பொய் வாக்குறுதி என எதிர்க்கட்சியினரான அதிமுக, பாஜகவினர் முகத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கரியை பூசியுள்ளார். இன்றைக்கு உலகமே பாராட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. அத்துடன் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 11.19 சதவீதத்தை எட்டி பெருமையை தேடிக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய பாஜ அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய்க்கு 29 பைசா தான் தருகிறார்கள். ஆனால், பீகார், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு அதிகம் வழங்குகிறார்கள். ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.3,407 கோடி, கல்வித்துறைக்கான நிதி ரூ.3,548 கோடி, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.1,790 கோடி ஆகியவற்றை தர மறுத்து வருகின்றனர்.
நகர்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு தருவது 10 சதவீத நிதி தான். மாநில அரசு 90 சதவீத நிதி அளிக்கிறது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 1.31 கோடி மகளிர் பயன்பெறும் வகையில் மகத்தான திட்டமாக மாறியிருக்கிறது எனக்கூறினார்.
இதையும் படிங்க: கந்து வட்டி கொடுமை... இளம் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த அதிமுக நிர்வாகி கைது...!