புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ளது மெய்வழிச்சாலை. இங்கு மெய்மதத்தை தழுவிய நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்கையை விரும்புவதால் நான்கு சுவர்கள் எழுப்பி அதன் மேல் கூரை அமைத்து தொலைக்காட்சி, மின்சாரம் உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பத்தில் தொடர்பு இல்லாமல் விளக்கு ஒளியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள குளக்கரையில் சேர்ந்து கிடந்த கழிவு குப்பைகளை கடந்த திங்கள்கிழமை எரித்த போது அதில் இருந்து வெளியேறிய தீ ஜூவாலைகள் அருகில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீட்டின் கூரைகளில் தீ பட்டு எரியத் தொடங்கி காற்றின் வேகத்தால் தீ மள மளவென்று அடுத்தடுத்த வீடுகளில் பரவியது. நிகழ்விடம் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் சுழன்றடித்த காற்றால் வீடு முழுவதும் தீக்கிரையாகின.
இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

இதையடுத்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி வீடு இழந்து தவிப்போருக்கு உடனடி நிவாரணமாக அரிசி, பருப்பு, காய்கறி, போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை, கட்சியாக எடுத்துக்கொண்ட பிறகு அவரது கருத்துக்கள் குறித்து பேசலாம் என்றார்.

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், நாங்கள் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தோம்.

அதே போல், திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், காவலர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் லாக்கப் டெத் தொடர்பான புள்ளி விவரங்களை தேர்தல் அறிக்கையாக நாங்கள் கொடுப்போம், யார் ஆட்சியில் லாக்கப் டப் அதிகரித்தது என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல சாத்தான்குளம் சம்பவத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், லாக்கப் டெத்தினால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொல்வது போல் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நாற்காலி என்ன வாடகை சேரா? - விஜயை வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்...!