எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பிச்சென்ற நிகழ்வு, தற்போதைய ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த மூடர் கூட்ட ஆட்சி, சிறை நிர்வாகத்தை முற்றிலும் சீர் குலைத்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சிறைக்காவலர்களே தாக்கப்பட்டு கைதிகள் தப்பிச்செல்லும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்ந்துள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார். சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர், அந்த ஆய்வின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த எந்த உத்தரவுகளையும் பிறப்பித்தாரா என்றும் அவர் கேட்டார்.

ஒருபுறம் குழந்தைகள் வீட்டிலிருந்து காணாமல் போவதும், மறுபுறம் கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதும் சட்ட ஒழுங்கின்மையின் அடையாளமாக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய சூழலில் ஆட்சி நடத்துவதே தற்போதைய முதலமைச்சரின் சாதனையாக அமைந்துள்ளது என்று அவர் கசப்பான கருத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: தப்பு செஞ்சா சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கணும்! அதான் சரி! அன்பில் மகேஷ் கைது! அண்ணாமலை வரவேற்பு!
தப்பிச்சென்ற அனைத்து கைதிகளையும் உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு அழைப்பு விடுத்தார் உதயநிதி ஸ்டாலின். சிறைத்துறையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு..!! தவெக ஆட்சியில் தொடரும் எஸ்கேப்..! திமுக பரந்தாமன் பேட்டி.!!