தமிழக சட்டசபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், "2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும்போது தமிழ்நாட்டின் தொகுதிகள் வெகுவாக குறையும்" என முதலமைச்சர் விஜய் பேசினார். மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையான 543-ஐ மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து ஆரம்பித்தனர்.
அப்போது முதல் ஆளாக எழுந்து நின்ற திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உங்களுக்கு தெரிந்த செய்திதான் இது. அரசின் சார்பாக 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளைச் செய்கிறபோது, அந்தப் பகுதியிலிருந்து நன்றி தெரிவிப்பதும், பாராட்டுவதும் எப்போதுமே நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான்.
இதுபோன்ற தனித் தீர்மானங்களை முதலமைச்சர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கொண்டு வருகிறபோது, பிரதான எதிர்க்கட்சிக்குத்தான் முதலில் அழைப்பு கொடுக்கிற பழக்கம் இதுவரைக்கும் இருந்திருக்கிறது. அதை நினைவூட்டுகிறேன். ஏனென்றால், அவரை நீங்கள் அனுமதியுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் எல்லாருமே பேசுவதற்கு அனுமதியுங்கள். ப்ளீஸ்.
இதையும் படிங்க: நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!
அதுதான் இதுவரைக்கும் இருந்துவருகிறது. இருங்கள். உங்களுக்குத்தான் குரல். அவர்தானே? அவர் சொன்ன பிறகு நீங்கள் எதற்காகச் சொல்கிறீர்கள்? அமைதியாக இருங்கள். நீங்கள் சொன்னது புரிந்துகொள்ள முடிகிறது.
அதற்கு சபாநாயகர், சென்ற முறை இதுபோன்று அனுமதித்தேன். ஏன் என்று சொன்னால், கட்சிகளுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்றை, அப்படி கொண்டு வந்து போட்டுத்தான் வந்தோம். கட்சிகளுக்கு ஏற்ப கொடுத்துக்கொண்டு வந்தோம் என்றார்.
அப்போது அவை முன்னவரான செங்கோட்டையன் குறுக்கிட்டு, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு பேரவைத் தலைவர் விரும்புவது எல்லா கட்சிகளும் பேசி, எதிர்க்கட்சி அதற்கான விளக்கத்தைச் சொல்கிறபோது இன்னும் அது தெளிவாக இருக்கும் என்ற முறையில்தான் அவர் அதைச் சொல்லியிருக்கிறாரே தவிர, வேறு ஒன்றும் இல்லை என்றார்.
இதற்கு சபாநாயகர், பேரவை விதி 98-ன்படி, தீர்மானம் ஒன்றை பேரவைத் தலைவர் பேரவைக்குப் படித்துக் காட்டிய பின்னர், அவர் அழைக்கிற வரிசையில் உறுப்பினர்கள் அதன் மீது பேசலாம். அந்த அடிப்படையில் சில மாற்றங்களை நான் செய்கிறேன் எனக்கூறினார்.
இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!