சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக கட்சி துண்டினை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சியாக அதிமுக இருக்கும் போது தமிழகம் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது , சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது, குடிமராமத்து திட்டத்தின் மூலம் திட்டம் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டது , இதனால் மழைக்காலங்களில் பெய்த நீர் சேமிக்கப்பட்டது. கோடைகாலத்தில் அந்த நீர் பயன்படுத்தப்பட்டது. ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண், விளை நிலங்களுக்கு இயற்கை உரமாக கொடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது , விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்காக அதிக திட்டங்களை நாம் கொண்டு வந்தோம் , அதேபோல கைத்தறி விசைத்தறி நிறைந்த இந்த மாவட்டத்தில் இந்த தொழில் சிறக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது . ஆனால் தற்போது விசைத்தறி கைத்தறி தொழில் நலிந்து வருகிறது. இந்த ஆட்சியில் நிர்வாக திறன் இல்லாத காரணத்தினால் நெசவுத் தொழிலும் , விசைத்தறி தொழிலும் தேய்ந்து வருகிறது, மீண்டும் அதிமுக ஆட்சி வரும்பொழுது நெசவாளர்களும், விசைத்தறியாளர்களும் சிறப்பாக தொழில் செய்ய அனைத்து வசதியும் செய்து தரப்படும் என்றார்.
இதையும் படிங்க: மது போதையில் எடப்பாடி பழனிசாமி கண்முன்பே இளைஞர்கள் செய்த காரியம்... தட்டித்தூக்கிய போலீஸ்!
மேலும் மரம் ஏறும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் உள்ளனர், அவர்களுடைய கோரிக்கைகள் ஏற்று அதிமுக ஆட்சி வரும்போது நிறைவேற்றப்படும் என்ற அவர் , தொழிலாளர்கள் மரம் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்தால் , அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும் , அவர்களுக்கான காப்பீடு திட்டத்திற்கான பிரீமியத்தை அதிமுக அரசாங்கம் செலுத்தும், இதன் மூலம் அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும், மரமேறும் தொழிலாளர்களுக்கு அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். இதனால் நாடார் சமுதாயம் உயரும் என்றார்.
விசைத்தறி நெசவாளர்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், இதேபோல் அவர்கள் தொழில் செய்வதற்கும் சலுகைகள் வழங்கப்படும் என்றார். 100 ஏரி திட்டத்தின் மூலம் நான்கு சட்டமன்ற தொகுதிகள் பயனடைந்து வருகிறது, அதாவது மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரிகள் நிரப்புவதற்காக இந்த திட்டம், நான் முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தேன். முதல் கட்டமாக ஆறு ஏரிகள் நீர் நிரப்புகின்ற வகையில் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தின் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் , ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக அரசியல் காழ்ப்புணர்சி காரணமாக இந்த திட்டத்தை பணி செய்து வருகின்றனர். மீண்டும் அதிமுக ஆட்சி வந்த உடன் 100 ஏரி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அனைவருக்கும்ஙய உரிய நீர் கிடைக்கும் சூழலை உருவாக்கி தருவோம்.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நிர் வெளியேறி , கடலில் வீணாக கலந்து வருகிறது. இந்த அரசு விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் , 100 ஏரி திட்டத்தை ஒரே ஆண்டில் நிறைவேற்றி இருக்கலாம் , ஆனால் அதிமுக ஆட்சியில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் வெறும் 25 சதவீத பணியை நான்காண்டு காலமாக நீடித்து வருகின்றனர். இந்த பணி நிறைவேறதால் பல ஏரிகள் வரண்டு கிடக்கிறது. எனவே இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவது நம்முடைய எண்ணமாக இருக்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு விலை இல்லா ஆடுகள் என வழங்கினோம். எதிர்காலத்தில் வீடு இல்லாமல் கூரை வீட்டில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் , நிலம் இல்லாதவர்களுக்கும் வீட்டுமனை வழங்கி அவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக , மக்கள் மகிழ்ச்சி பெரும் வகையிலான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் , அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையாக அது அமையும் என்றார்.
இதையும் படிங்க: “வேணாம்... காரில் ஏற வேண்டாம்...” - செல்லூர் ராஜுக்கு ‘நோ’ சொன்ன எடப்பாடி பழனிசாமி...!