கடந்த சில வருடங்களாகவே தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துக் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ''கஞ்சா விற்பனையைத் தொடர்ந்து புதுசுபுதுசாக வகை சிந்தட்டிக் டிரக் புழக்கமும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்கும் அதே சமயத்தில் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அதிகரித்தது. அத்தோடு, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை என்று பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர்.

தமிழகக் காவல்துறை வரலாற்றில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதிலும் கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் மட்டும் இதுவரை 16 என்கவுண்டர் சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதில் கடைசியாக நடந்த சீசிங் ராஜா தொடங்கி நீராவி முருகன், சோட்டா வினோத், குள்ள விஷ்வா, சண்டே சதிஷ், கொம்பன் ஜெகன், காக்காத்தோப்பு பாலாஜி என மொத்தம் 16 என்கவுண்டர் நடந்திருக்கிறது.
இதையும் படிங்க: பாதுகாப்புக்கு தான் துப்பாக்கி.. என்கவுண்டர் செய்றதுக்கு இல்ல..! போலீசுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், வழக்கறிஞருமான டாக்டர் சரவணன் கருப்புசாமி என்கிற எஸ்.கே.சாமி அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச்சங்கம் சார்பில் அளித்த புகாரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு 15 நாட்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு டி.ஜி.பி.சங்கர் ஜிவாலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் எஸ்.கே.சாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: A+ ரவுடிகளுக்கு செக்..! சென்னைக்குள் வரத் தடை.. போலீஸ் அதிரடி உத்தரவு..!