திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவின் சக்திவாய்ந்த முகமாக விளங்கும் பெரியசாமி, கட்சித் தலைமைக்கு மிக அருகில் இருப்பவர் என்பது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்தது. ஆத்தூர் தொகுதியில் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர், எப்போதும் செல்வாக்கோடு அரசியலில் செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுக துணை பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமை வழிச் சாலை இல்லம், திண்டுக்கல் வீடு, திருவல்லிக்கேணி எம்எல்ஏ விடுதியில் உள்ள அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்து வருவதால் பரபரப்பு அதிகரித்து வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல் பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரான ஐ.பி.செந்தில்குமார் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.17 ஆயிரம் கோடி லோன் மோசடி! இதெல்லாம் என்ன கணக்கு? ED அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்..!
இச்சம்பவம் தமிழக அரசியல் சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் ரத்துச் செய்யப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அனில் அம்பானி வீட்டில் ED RAID.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!