சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதனிடையே, பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் களத்தில் ஒன்றுமே செய்வது கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி புலம்பியதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தோ தவறுகளை சுட்டிக் காட்டியோ மாவட்ட செயலாளர்கள் பணியாற்றுவது கிடையாது என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் தற்பொழுது இருக்கும் நிலையில் இருந்து அதிமுக அதல பாதாளத்திற்கு சென்று விடும் என எடப்பாடி பழனிச்சாமி குமுறியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வாடிய முகத்தோடு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக எடப்பாடி சொன்னதை கேட்டு கூட்டம் முடிந்து மாவட்டச் செயலாளர்கள் வெளியேறியதாகவும் தகவல் கசிகின்றது.
இதையும் படிங்க: SIR... பூத் ஏஜென்ட்களிடம் பொறுப்பா? அதிமுக கடும் எதிர்ப்பு... தேர்தல் ஆணையத்தை அணுக முடிவு...!
ஏற்கனவே கட்சியில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்து வரக்கூடிய நிலையில் அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்தவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை நீக்கி உள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் மீதும் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள தொண்டர்களை கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு இபிஎஸ் முக்கிய ஆலோசனை... கூடியது அதிமுக மா. செ. கூட்டம்...!