• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி வந்த ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் வேறு, வேறு பாதையை தேர்வு செய்துள்ளதால் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டது. 
    Author By Amaravathi Fri, 27 Feb 2026 18:21:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS relived from ops and sasikala issue

    அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி வந்த ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகிய இருவரும் வேறு, வேறு பாதையை தேர்வு செய்துள்ளதால் அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டது. 

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தற்பொழுது திமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சற்று நேரத்திற்கு முன்பாக இணைந்தார். அதேபோல்  கடந்த வாரம் பசும்பொன்னில் தனி கட்சி தொடங்க உள்ளதையும், அதற்கான கொடி அறிமுகத்தையும் வி.கே.சசிகலா நடத்தி முடித்துள்ளார்.  ஆக இரண்டு பேருமே தனித்தனியாக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து விட்டனர். இதனால் அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக உள்ள இபிஎஸுக்கு சட்ட ரீதியாக இருந்த சில சிக்கல்கள் தற்பொழுது முழுவதுமாக தீர்ந்துவிட்டது. ஏனென்றால் சசிகலா பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு செல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டபோது அதற்கு முன்பாக அவரைத் தான் பொதுச்செயலாளராக அதிமுகவினுடைய பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. அதன் பிறகு ஏற்பட்ட அந்த அரசியல் மாற்றம் காரணமாக அதே பொதுக்குழுவே சசிகலாவை அதிமுகவில் இருந்து தூக்கியடித்து.

    இதனை எதிர்த்து சசிகலா உரிமையல் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்தார்.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. அவருடைய லெட்டர் பேடிலேயே அவர் பொதுச்செயலாளர் என்றுதான் சசிகலா குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிடுவார். ஏற்கனவே அதிமுகவில் மூன்று முறை பல்வேறு காலகட்டங்களில் அவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அதிமுகவினுடைய உயரிய பதவியாக இருக்கக்கூடிய பொதுச்செயலாளருக்கு நிகராக ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியை உருவாக்கி அந்த ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் இருந்திருக்கிறார். ஆனால் மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததால் இருவருக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. 

    இதையும் படிங்க: திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

    ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியை அதிமுகவில் மீண்டும் உருவாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 

    அதற்கு முன்னதாக பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்னுடைய ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாத நிலையில் கிட்டத்தட்ட நீதிமன்றம் சென்று அவர் தீர்ப்பு வாங்கி நாங்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த வழக்கின் அடிப்படையில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் கலந்து கொண்டார். அங்கு பாதியிலே அவர் வெளியேற்றப்பட்டார். கடுமையாக விமர்சனங்களும், திட்டியும், கேவலமாக பேசியும் அவரை வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து வானகரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்று பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அங்கு நடந்த ஒரு வன்முறை ஆட்டம் மற்றும் அசம்பாவிதங்களின் அடிப்படையில் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட பல பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தைக் கொண்டே ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

    அதன்பின்னரும் கூட தொடர்ச்சியாக ஓபிஎஸ் அதிமுக கொடியணிந்த காரிலும் அதிமுக வண்ணங்கள் பொருத்திய வேட்டியும் கட்டியிருந்தார். அதையும் நீதிமன்றத்திற்கு சென்று கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருத்தர் எங்களுடைய கட்சி கொடியை பயன்படுத்துகிறார் எங்களுடைய கட்சியினுடைய கரைவேட்டியை பயன்படுத்துகிறார் என்று அதற்கும் தடையாணை வாங்கியது எடப்பாடி தரப்பு. இதனிடையே தன்னை பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். 

    ஆக இந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த இரண்டு வழக்குகளில் ஆதிமுகாவினுடைய சட்ட விதிப்படி பார்க்கும் பொழுது பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவே இறுதியானது. அப்படி இருக்கும் பொழுது திரு எடப்பாடி பழனிச்சாவிக்கு பெரிய அளவில்
     சிக்கல் இல்லை என்றாலும், இந்த இரண்டு வழக்குகளும் நிலுவையிலேயே இருந்து வந்தன. இந்த நிலையில் சசிகலா தனி கட்சி தொடங்கிவிட்டதாலும், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததாலும் இருவரும் தங்களுடைய அதிமுகவின் தொடர்பை துண்டித்துக் கொண்டனர் என்று தான் நாம் புரிந்து கொள்ளலாம். ஆகையால் சட்ட ரீதியாக பார்க்கும் பொழுது இனி எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த இரண்டு வழக்குகளும் இனி நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது. ஆகையால் இந்த வழக்குகள் எல்லாம் இனி நிலுவையிலிருந்து முழுவதுமாக அகற்றப்பட்டு இனி திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்தவித கட்சி ரீதியாக எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றுதான் அரசியல் வல்லுனர்கள் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    மேலும் படிங்க
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    தமிழ்நாடு
    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!

    அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share