தமிழக அரசியல் களம் தனிக்காட்டு ராஜாவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம்” என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருந்தார். இதனிடையே, மக்களை நேரடியாக சந்திக்க தொடங்கிட்டாரு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். அவருடைய சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் உற்றுநோக்கி வருகின்றனர்.
டெல்லி முதல் தமிழ்நாடு வரை விஜய் பிரச்சாரத்தை உற்றுநோக்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி தனது ரூட்டை மாற்றியுள்ளார். கலைஞர் பார்முலாவை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருக்கிறாராம். அதாவது கடந்த 2006 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் புதிதாக அரசியல் களத்துக்கு தேமுதிக வந்தது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகளை பெற்று எம்எல்ஏவாகவும் ஆனார்.
தேர்தலுக்கு முன்னாடி அவருடைய வாக்குகள் எதிர்கட்சிகளுக்கு தான் சேதாரம் ஆகும். வாக்குகளை பிரித்து மறுபடியும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என பலரும் கலைஞரிடம் சொன்னாங்க, ஆனால் எதார்த்தத்தில தேமுதிகவிற்கு விழுந்த வாக்குகள் ஆளுங்கட்சிக்கு தான் வேட்டாக அமைந்தது. இதனால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது, முதலமைச்சராக மறைந்த கலைஞர் கருணாநிதியும் அதிகாரத்தில் அமர்ந்தார். அதேபோல 2026லும் விஜய் பிரிக்கக்கூடிய வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராக போயி பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாக வரும். அதன் மூலமாக நாம் சிஎம் சீட்டில் உட்காந்துரலாம் அப்படின்னு கணக்கு போடுறாரு எடப்பாடி பழனிசாமி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் இன்று..! குவியும் கழக உடன்பிறப்புகளின் வாழ்த்துகள்..!
ஆனால் 2006-யில் மெகா கூட்டணி அமைச்சாரு கலைஞர். அதுமட்டுமில்லாம ஆளுங்கட்சிக்கு எதிரான பரப்புரைகளையும் தீவிரமா முன் வச்சாரு. அந்த மெகா கூட்டணியில குறைந்த அளவு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார் கலைஞர் மு. கருணாநிதி. இவை எல்லாமேதான் அந்த கூட்டணி கட்சிகளுடைய பலத்தோடு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினது. விஜயகாந்த் என்ற சூறாவளி கூட ஆளுங்கட்சியான அதிமுகவைத் தான் சாய்த்தது. திமுக கூட்டணியில் அந்த மாதிரி எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைச்சிருக்காரா? சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்காரா? என அவர் தான் சிந்தித்து பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்... பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்... பரபரப்பு பின்னணி...!