• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எ.வ.வேலுவுக்கு என்னாச்சு?... திடீர் உடல்நலக்குறைவு... சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...!

    மருத்துவச் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் சுமார் 10 நாட்களுக்குள் எ.வ. வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Amaravathi Fri, 03 Jul 2026 15:19:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    E.v.velu admitted to Singapore hospital

    திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு, உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தற்போது நேரில் ஆஜராக இயலாது என்றும், சிகிச்சை முடிந்ததும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் சாலைகள் அமைக்காமல் அமைத்ததாகக் கணக்குக் காட்டி, அரசு நிதியில் ரூ.23.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அரப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில், அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பேர் மீது சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் குதிரை பேரம் விவகாரம்..! முன்ஜாமீன்.? அசோக் குமார் மனு மீது ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    இதையடுத்து, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. அவரது சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காவல்துறை மூலம் சம்மன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், எ.வ. வேலு தனது வழக்கறிஞர் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதை அறிந்தேன். ஆனால் தற்போது சிங்கப்பூரில் உள்ள Lifeline Heart Centre மருத்துவமனையில் மருத்துவர் டாக்டர் ஜெயராம் லிங்க நாயக்கர் மேற்பார்வையில் இதய நோய்க்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் எனக்கு 10 நாட்கள் சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சிகிச்சை நிறைவடைந்ததும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், மருத்துவச் சான்றிதழையும் அவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவ அறிக்கையில், எ.வ. வேலுவுக்கு இஸ்கிமிக் இதய நோய், நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தோல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கான மருத்துவ ஆலோசனைக்காக அவர் கடந்த 26-ஆம் தேதி சிங்கப்பூர் சென்றதாகவும், 27-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் வழங்கப்பட்டுள்ள சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தற்போது விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவச் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் எ.வ. வேலு தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

    இதனால், மருத்துவச் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் சுமார் 10 நாட்களுக்குள் எ.வ. வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் திருச்சி சிவா மகள்! கணவரும், அப்பாவும் திமுக! தவெகவில் புதுவரவு!

    மேலும் படிங்க
    ஆட்சி கவிழ்ப்பு சதி..!! கைதான 3 பேரையும் விசாரிக்கணும்..! போலீஸ் மனுத் தாக்கல்..!!

    ஆட்சி கவிழ்ப்பு சதி..!! கைதான 3 பேரையும் விசாரிக்கணும்..! போலீஸ் மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் கையூட்டு! தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் கையூட்டு! தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!

    விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    சொன்னது தூயசக்தி, நடப்பது ஊழல் வேட்டை! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    சொன்னது தூயசக்தி, நடப்பது ஊழல் வேட்டை! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!

    இந்தியா
    விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்!  ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    அரசியல்

    செய்திகள்

    "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share