அதிமுக திண்டுக்கல் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று ஏர்போர்ட் நகரில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தற்போது செய்து கொண்டு இருக்கிறது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு உதவியது எடப்பாடி தலைமையிலான அரசு தான்.

ஆனால் ஸ்டாலின் அரசு அவர்கள் செய்தது போல் பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பசு மாடு கன்று வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனர். மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு போன்ற கட்டண உயர்வினால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை போனதாக சோதனை நடந்த நிலையில் இதுகுறித்து முதல்வரோ துணை முதல்வரோ வாய் திறக்கவில்லை.
இதையும் படிங்க: வக்கு இருந்தா "யார் அந்த தம்பி"னு சொல்லுங்க...ஸ்டாலினை டார் டாராக கிழித்த இபிஎஸ்

திமுக அமைச்சர்கள் மீதான ரத்து செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வருகின்ற 2026 தேர்தலில் மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி ஆட்சிக்கு வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

மின் கட்டண உயர்வு வீடுகளுக்கு இல்லை என்றாலும் தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு விதிக்கப்படும் விலை உயர்வு மக்களை தான் பாதிக்கும். மின் கட்டணத்தை உயர்த்த கூடாது. கடந்தாண்டு நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இப்போது செல்கிறார். அவர் அதற்காக செல்கிறாரா அல்லது டாஸ்மாக் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களை சந்திக்கப் போகிறாரா என சந்தேகம் உள்ளதாக எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.அவர் கேட்டுள்ளது சரியானது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும். திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்கும். ஆனால் சூழ்நிலை அந்த பக்கம் கூட்டணி சேரும்போது, திமுக ஆட்சி வரக்கூடாது என அத்தனை கட்சிகளும் அண்ணா திமுகவில் சேருகின்றன. இது காலத்தின் கட்டாயம். அரசியலில் இதை ஒன்றும் பண்ண முடியாது என கூறினார்
இதையும் படிங்க: கடும் விமர்சனத்திற்குள்ளாகும் திமுக ஆட்சி.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?