தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை தேரோட்டம், சஷ்டி, ஆடிப்பூரம், பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விளாத்திகுளத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி தேவி இவர் விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவி தனது பிறந்தநாளையொட்டி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கையில் தேங்காய், பழக்கூடையுடன் கோவில் பிரகாரத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளுக்கு சென்று, தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து அந்த காட்சிகளை ரீல்ஸ் வீடியோவாக தொகுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரத்த சகதியில் தமிழ்நாடு..! அராஜகத்துக்கு முடிவில்லையா..? கொந்தளித்த ஸ்டாலின்..!!
கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவில் தேவி வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதால் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் பரவியதால், இதுகுறித்து ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வீடியோ தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், விளாத்திகுளம
கோவிலில் ரிலீஸ் எடுத்தது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!