பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், கர்நாடக வீட்டுவசதி மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் பி.இசட் ஜமீர் அகமது கான், ''நான் என் உடலில் கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களைத் தாக்குவேன்'' எனப் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், ''பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாக இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனுமதித்தால் போருக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இந்துஸ்தானிகள். பாகிஸ்தான் எங்களுடன் ஒருபோதும் எந்த உறவும் கொண்டிருக்கவில்லை. பாகிஸ்தான் எப்போதும் எங்கள் எதிரியாக இருந்து வருகிறது. மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அரசு என்னை பாகிஸ்தானுக்கு போருக்குச் செல்ல அனுமதித்தால், நான் செல்லத் தயாராக இருக்கிறேன்.

நான் போருக்கு பாகிஸ்தானுக்குச் செல்வேன். மோடி, ஷா எனக்கு ஒரு தற்கொலை குண்டைக் கொடுக்கட்டும். நான் அதை என் உடலில் கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களைத் தாக்குவேன்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: மக்களை தூண்டி விடும் கன்டென்ட்டுகள்... பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு!!
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கான் கடுமையாகக் கண்டித்தார். இது அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான "கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்" என்று கூறினார். ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றான லஷ்கர் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். லஷ்கர் கிளையைச் சேர்ந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
இதையும் படிங்க: குரங்காட்டும் கர்மா..! அடிமேல் அடி... பாகிஸ்தானில் 12 நாட்கள் 'ஸ்மார்ட்' லாக்டவுன்..!