தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சட்டமன்ற உறுப்பினரும் , கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணி, தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவன தலைவரும், மாநில தலைவருமான டாக்டர். ராமதாஸ் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே ஜிகே மணி, செய்தியாளர்களிடம் கூறும் போது, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பாமக- வை வலுப்படுத்தவும் , 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக கட்டமைப்பை பெரிய அளவில் உருவாக்கி தேர்தலை சந்திப்பதற்காக கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.
தொடர்ந்து பாமக-வின் ஆணிவேர் அய்யா தான் என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் உள்ளது, அன்புமணி புகைப்படம் இடம்பெற வில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜிகே மணி , இந்த இயக்கத்தை தொடங்கியவர் ராமதாஸ் தான் , அவர் இயக்கத்தை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை பெற்று தருவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.
ஏழு நாள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தி, அதில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் திடீர் போராட்டம்... பரபரப்பு...!
இந்த நிலையில் தான் வன்னியர் மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார். மத்திய அரசிடம் ஓபிசி பிரிவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் ராமதாஸ். மருத்துவ மேற்படிப்பில் எஸ்சி எஸ்டி களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளார். இப்படி தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் ராமதாஸ். எனவே தான் இந்த இயக்கத்திற்கு எல்லாம் டாக்டர். ராமதாஸ் தான் , இதில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாம்பழம் சின்னம் பற்றி கேள்வி எழுப்பிய போது , பதில் எதுவும் கூறாமல் சென்றார்.
ஜி.கே.மணியின் இந்த பதில், வன்னியர் சமூக மக்களுக்காக ராமதாஸ் இவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார். அன்புமணி என்ன செய்துள்ளார் என மறைமுகமாக கேள்வி எழுப்புவது போல இருப்பதாகவும், ராமதாஸை மட்டுமே வன்னியர் சமூக மக்கள் தங்களது அடையாளமாக நினைக்கிறார்கள். அன்புமணியை புறக்கணிக்கிறார்கள் எனக்கூறுவது போல உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தயவு செஞ்சி வராதீங்க... அன்புமணி தலையில் இடியை இறங்கிய ஜி.கே.மணி...!