நாம் தமிழர் கட்சியின் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் காளியம்மாள். கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். தமிழ்த் தேசியக் கொள்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக மீனவர் சமூகத்தில் இருந்து வந்து, பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் NTK சார்பில் போட்டியிட்டு கவனம் ஈர்த்திருந்தார்.
அவரது பேச்சுகள் காரமானவை, உணர்ச்சிகரமானவை. கட்சியின் உறுப்பினர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.ஆனால் 2025 பிப்ரவரி மாதத்தில், காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் அதிமுகவில் இணைந்ததற்கான காரணம் என்ன என்பதை காளியம்மாள் விளக்கினார். அரசியல் கட்சியில் இருந்து விலகி ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அதிமுகவில் இன்று முதல் தன் இணைந்திருப்பதாக தெரிவித்தார். ஒரு எளிய மக்களுக்கான அரசியல் வாய்ப்பை உருவாக்கக்கூடிய அமைப்பில் இருந்து மக்களின் உரிமை குறித்தும் உரக்க குரல் கொடுப்பதற்கு களத்தில் மீண்டும் இணைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் இருந்து தொடங்கி தனது அரசியல் பயணம் தொடரும் என்று கூறினார்.
இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்... அதிமுகவில் இணைந்த காளியம்மாள்... அரசியல் வட்டாரத்தில் ஷாக்..!!
அதிமுகவை தேர்வு செய்ததற்கான காரணம் இந்த கட்சியினுடைய தலைமை ஏற்று இருக்கக்கூடியவர் அடிப்படை குடும்பத்தில் சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் எளிமையானவர்கள் தலைமை ஏற்க முடியும் என்ற சூழல் இருப்பதாலும், ஒரு தமிழனின் தலைமையில் இயங்குவதற்கான மன உறுதியோடு இருந்ததாலும் அதிமுகவில் தேர்வு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். தன் இன மக்களின் உரிமையை செய்வதற்காக யார் உழைப்பார்கள் என்ற கேள்வி இருந்ததால் மக்கள் களத்தில் மட்டும் இருந்ததாகவும், அனைத்து மக்களும் சேர்ந்து இந்த முடிவெடுத்து இருப்பதாகவும், தனித்து இந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செம்ம ட்விஸ்ட்... அதிமுகவில் இணைந்த காளியம்மாள்... அரசியல் வட்டாரத்தில் ஷாக்..!!