பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலில் இஸ்ரேல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கும், நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பதவியிலிருந்து அகற்ற பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர்.
எதிர்க்கட்சி சற்றே முன்னிலையில் இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறுவது சவாலாகவே உள்ளது. போரின் பின்னடைவுகள், பிணைக் கைதிகள் விவகாரம் மற்றும் நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் வழக்குகள் போன்றவற்றால் அவருக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது.
இதையும் படிங்க: இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடக்கலாம்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! அமெரிக்க தூதர் அதிரடி தகவல்!

மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி, கட்சிகளுக்கு இடையே கூட்டணிகள் அமைக்கப்பட்ட பின்னரே இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது இறுதி செய்யப்படும்.
இந்தத் தேர்தல் அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசிய அளவிலான தேர்தலாகும். பாதுகாப்பு விவகாரங்கள் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக அறியப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். ஆனால் இறுதி முடிவுகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சவுதி அரம்கோ எண்ணெய் ஆலையில் ட்ரோன் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர் உட்பட 2 பேர் காயம்!