தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. அதற்காக அரசு அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் தற்போது பேட்ச் ஒர்க் தான் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மழையின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் விரைந்து பேட்ச் ஒர்க் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். புதிய டெண்டர் விடப்பட்ட அடுத்த ஆண்டு மழைக்கு முன்பு அனைத்து சாலைகளும் முழுமையாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்த காவல்துறையை முதல்வர் விஜய் மீட்டு வருகிறார் என்றும் திமுக ஆட்சியில் காவல்துறையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கனிமொழி பதில் தர வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் செயல்பட விடாமல் தடுத்து காவல்துறையை சீரழித்து வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “இனியும் சும்மா இருக்க மாட்டோம்...” - எல்லை மீறிய தவெக ஐடி விங்க்... திமுகவில் இருந்து பறந்த உச்சக்கட்ட வார்னிங்...!
மேலும் பொய்யான பரப்புரை, ஸ்டாலின் எத்தனை வீடியோ வேண்டுமானாலும் போடட்டும் என்றும் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பேசுவதை விட செயல்படுவதை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றும் அதைதான் தமிழக வெற்றி கழகத்தினர் செய்து வருகிறோம். எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!