திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முரட்டு பாளையத்தில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்திற்கு பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை கூட்டம் கலையாமல் இருப்பதற்காக திமுகநிர்வாகிகள் சார்பில் புதிதாக ஒரு யுத்தி கையாளப்பட்டது.குலுக்கல் முறையில் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தங்க நாணயம், கிரைண்டர், கேஸ் ஸ்டவ், பேன், அயன் பாக்ஸ், ஹாட் பாக்ஸ் ,பீரோ என மொத்தம் 60 பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை முன்பு வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக சுமார் 1000 பொதுமக்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் வாக்களிப்பிர் இரட்டை இலை என்ற டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பின் தனித்தனி எண்கள் எழுதப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: எங்களை ஏமாத்திட்டாரு... ரூ. 7 கோடி மோசடி… அதிமுக EX. அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு…!
பொதுக்கூட்டம் முடிந்த பின்பு மூன்று சிறுமிகள் கொண்டு குழுக்கள் முறையில் எண்கள் வாசிக்க வாசிக்க அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுப் பொருட்கள் இல்லாதவர்களுக்கு தட்டு வழங்கப்பட்டது. பொதுவாக பெரிய அரசியல் கூட்டங்களில்தலைவர்கள் பேச தொடங்கியதும் கூட்டம் குறையத் தொடங்குவது வழக்கம். ஆனால் அதிமுகவின் இந்த புதிய யுக்தியால் பரிசு மழையால் கூட்டம் மாலை 6:00 மணி முதல்10 மணி வரை கலையாமல் அப்படியே இருந்ததாக கூறப்படுகிறது. விழா ஆரம்பிக்கும் பொழுது அதிமுக கூட்டங்களில் பெரும்பாலும் எம்ஜிஆர் பாடல்களுக்கே நடன கலைஞர்கள் நடனம் ஆடுவது வழக்கம் ஆனால் இந்த கூட்டத்தில் மூன்று விஜயின் பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனம் ஆடினர்.
இதையும் படிங்க: அதிமுக யாருடன் கூட்டணி வெச்சா என்ன? திமுகவுக்கு என்ன கஷ்டம்… விளாசிய இபிஎஸ்…!