ஒரு ஊழியருக்கு தேவை இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆதரவு வழங்க வேண்டும் என்பது இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக முக்கியமான மற்றும் மனிதநேயம் நிறைந்த கொள்கையாகக் கருதப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் வெற்றி, அதன் ஊழியர்களின் நலவாழ்வு மற்றும் மனநிறைவைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கின்றனர், மற்றும் அவர்களின் தேவைகளைப் புரிந்து, அவர்களுக்கு உரிய ஆதரவு வழங்குவது நிறுவனத்தின் கடமையாகவும், பொறுப்பாகவும் உள்ளது.
ஒரு ஊழியரின் தேவைகள் பலவகைப்பட்டவையாக இருக்கலாம். இவை பொதுவாக உடல், மன, மற்றும் தொழில்முறைத் தேவைகளாகப் பிரிக்கப்படலாம். உடல் தேவைகளில் பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவ வசதிகள், மற்றும் ஓய்வு நேரம் ஆகியவை அடங்கும். மனத் தேவைகளில் மன அழுத்த மேலாண்மை, மனநல ஆலோசனைகள், மற்றும் பணியிடத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் ஆகியவை உள்ளடங்கும்.

இருப்பினும் சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அப்படியாக பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவரே பகிர்ந்து உள்ளார்.
இதையும் படிங்க: “அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே” - பாக்., - ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் சொன்ன முக்கிய செய்தி... ஷாக்கான உலக நாடுகள்...!
விபத்தில் காயமடைந்த தனது தாயை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மாத காலம் work from home அவர் கேட்டதாக கூறியுள்ளார். ஆனால் மீட்டிங் போட்டு மறுப்பு தெரிவித்ததாக நிறுவனத்தின் மீது பெண் ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார். ஸ்கேன் ரிப்போர்ட் ஆகியவற்றை சமர்ப்பித்த பின்னரும் மனிதாபம் இல்லாமல் செயல்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!