நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. எப்போதும் போல எதிர்கட்சிகள் அமலியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். ரபேல் விமானம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூற ஆரம்பித்துவிட்டார். சரி விரிவான விவாதம் நடத்தலாம் என மத்திய அமைச்சர் ஜே.பி நட்டா கூறியது. நாடாளுமன்றத்தை விட்டு தலை தெரிக்க வெளியேறி விட்டார்கள் எதிர்கட்சிகள். இதற்கிடையே திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி ஒரு கேள்வியை முன்வைத்தார். அது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
மேற்குவங்கம் காரக்பூர் ஐஐடியில் கடந்த ஏழு மாதங்களில் நான்கு மாணவர்கள் இறந்துள்ளதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், மத்திய கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலை கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள் கல்லூரி வாரியாக பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும். அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி வளாகங்களில் தொடர்ந்து சாதிய வன்முறையால் மாணவர்கள் இறப்பது குறித்து மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மேலும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன என்பது போன்ற கேள்விகளை கனிமொழி எம்பி எழுப்பினார். இதனை தொடர்ந்து டெல்லி பாஜக எம்பிக்கள் கனிமொழியின் கண்ணிற்கு டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான் தெரியும். தமிழகம் தெரியாதது போல் பேசுகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, 10 வயது சிறுமைக்கு பாலியல் வன்கொடுமை, அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை என அடுக்கி கொண்டே போகலாம். அதை பற்றி பேசாமல் இங்கு வந்து அதுவும் கூட்டணியில் உள்ள மம்தா பனர்ஜியை வம்புக்கு இழுக்கிறார் என பேச தொடங்கிவிட்டார்கள்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பதிலடி கொடுத்த கனிமொழி.. எடப்பாடி பழனிசாமிக்கு நெத்தியடி..!
அதுமட்டுமின்றி தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளது என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் முடுகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்தது அதே ஊரில் உள்ள தேநீர் கடையில் இரட்டை குவலை, முறை சுடுகாட்டு பிரச்சனை என ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின் படி தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள் பட்டியலினத்தோருக்கு வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புகள் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பட்டியலினத்தை சேர்ந்த உள்ளாட்சி தலைவர்களின் மீது நடத்தப்பட்ட 21 சம்பவங்களின் மீது தாங்கள் கல ஆய்வினை மேற்கொண்டதாக கூறுகிறார். மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் கதிர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரையில் சாதிய வன்மத்தோடு மாணவன் சின்னதுரை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் நடக்கும் சாதிய வன்கொடுமைகள் குறித்து பட்டியலிட்டு வருகிறதாம் டெல்லி வட்டாரம். தமிழகத்தில் பட்டியல் இனத்தவரை பாஜக தலைவராக நியமித்து விட்டார்கள். திமுக எப்போது நியமிக்கும் என்ற கேள்விகளும் தற்போது எழுந்திருக்கிறது.
இதையும் படிங்க: "கவாச்" குறைபாடு... காதுலையே வாங்கல..! மத்திய அரசை சாடிய கனிமொழி..!