கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக் கிணங்க வெண்ணமலை பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்குட்பட்ட கோவில் இடங்களை சீல் வைக்கும் பணியில் இந்து அறநிலை துறை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு கிணங்க பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியும், காலியிடங்களுக்கு போர்டு வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவனை எதிர்த்து அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: “தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி” - பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த கரூர் எம்.பி. ஜோதிமணி...!
நேற்று காலை வெண்ணமலை அருகே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் இடம் எனக் கூறப்படும் பகுதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்தனர்.
அப்பொழுது அங்கு இருந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண்கள் உட்பட மூவர் தாங்கள் வைத்திருந்த மண்ணைனையை தலையில் ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் மீது தண்ணீரில் ஊற்றி பத்திரமாக மீட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தொடர்ந்து மக்களோடு இணைந்து 20 நிமிடத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திமுக, பாமக, நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உட்பட பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அதிகாரிகள் சீல் வைக்க வந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற கண்ணம்மாள், சக்திவேல், பரமேஸ்வரி, மகேந்திரன் ஆகிய 4 பேர் மீதும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர் மீதும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... ஒன்று கூடிய மக்கள்... ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் குண்டுக்கட்டாக கைது ...!