• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 19:13:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Duraivaiko about DMDK Entry

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக.முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில் : இன்றைய காலகட்டத்தில் திமுக., கூட்டணியில் தேமுதிக., சேருவது தான் உகந்தது. திமுக., கூட்டணியில் சேருவது தான் அவர்களுடைய இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் சரியானது என நினைத்து இணைந்திருக்கிறார்கள். மதிமுக., சார்பில் நான் அதை வரவேற்கிறேன்.

    திமுக கூட்டணி ஏற்கெனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கு தேமுதிக வரவால் கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது. 

    மதிமுக 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்த நோக்கத்திற்காக இணைந்தோமோ, அந்த நோக்கம் இன்றும் தொடர்கிறது. கூட்டணியில் சேருவது, கூட்டணியில் இருந்து விலகுவது, நேற்று வரை ஒரு இயக்கத்தை விமர்சனம் செய்துவிட்டு அடுத்த நாளே அதே இயக்கத்துடன் இணைவது இதற்கெல்லாம் மக்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள்.

    இதையும் படிங்க: திருச்சியை 2வது தலைநகரமாக்கனும்..! கனிமொழியிடம் முக்கிய கோரிக்கை மனு கொடுத்த துரை வைகோ..!

    தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும் திமுக தலைமையிலான அணியும், அதிமுக தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள்.  இன்றைக்கு புதிய இயக்கங்கள் கூட்டணிக்குள் வந்துள்ளன. அவர்களுக்கு தேவையான இடங்களை அவர்கள் கேட்கலாம். இதனால் குழப்பமான சூழ்நிலை. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு எங்கள் இயக்கத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம், யார் வேட்பாளர் என்பதை எல்லாம் சொல்ல முடியும். அதற்கு முன்பு சொல்லி குழப்பம் ஏற்பட்டு பிரச்சனை வந்துவிடக் கூடாது. 

    மதிமுகவுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் எங்களால் கூட்டணி தலைமைக்கு நெருக்கடி உருவாக்க கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்  தொடர்ந்து வலியுறுத்தி வருவது என்னவென்றால், ஜனநாயகத்திற்கு எதிரானவர்களுக்குமான யுத்தக் களமாகத்தான் இந்த தேர்தலை பார்ப்பதாக சொல்லி வருகின்றனர். 

    எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

    ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பது எங்களுடைய தொடக்க கால கொள்கை ஆனால், அதனை பிரதானப்படுத்தி, அதுதான் முக்கியமான கோரிக்கை என்று இந்த நேரத்தில் வைக்கவும் விரும்பவில்லை, அது தேவையற்றது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

    செய்தியாளர்கள் ஏற்கெனவே நாரதர் வேலை பார்ப்பார்கள். தேர்தல் நேரத்தில் டபுள் நாரதர் வேலை செய்கிறீர்கள். இதற்காகவே நாள்தோறும் 2 மணி நேரம் செய்தித்தாள் படிக்க வேண்டியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிகவை சேர்க்க எல்லா முயற்சியும் செய்தனர். ஆனால் அது நிறைவு பெறவில்லை. தேமுதிக கூட்டணிக்கு போகவில்லை என்பதால் பாஜக விமர்சனம் செய்கிறது. நான் இதை அரசியலாகத்தான் பார்க்கிறேன். 

    காலங்கள் மாறும் போது இன்றைக்குள்ள சூழ்நிலை இவற்றை எல்லாம் பொறுத்து தான் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றுகின்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தவெக தலைவர் விஜய் குறித்து நான் பேசிய பலவற்றை கட் செய்துவிட்டு, சிலவற்றை மட்டும் ஒளிபரப்பு செய்துள்ளனர். 

    விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தேர்தல் களத்தில் ஒரு தாக்கம் இருக்கும். 15 சதவீத வாக்குகள் வாங்குவார். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது சந்தேகம் தான். 

    சகோதரர் விஜய்யை பொறுத்தளவு, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து குரல் ஒலிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர். பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசாமல் இருக்கிறார். திமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதாக கூறும் விஜய், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள், திட்டங்கள், நிதி பிரச்சனைகள் குறித்து அவர் குரல் ஒலிக்க வேண்டும். அதில் மவுனமாக இருக்கிறார். 

    சகோதரர் விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5 ஆயிரம் வரவு மற்றும் கடந்த நான்கரை ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.

    தொழில் வளர்ச்சி இது ஒரு பக்கம், சமூக நீதியை செயல்படுத்தக் கூடிய வகை திட்டங்கள் இதன் மூலமாக மக்களின் நம்பிக்கையை பெற்று, தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். 

    மகளிர் உரிமை தொகையை பொறுத்தவரை வசதியான குடும்பங்களுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. சமூக நீதியின் அடிப்படையில் ஏழை எளிய குடும்பங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகத்தான் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. அதில் சில பேர் விடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் வழங்குவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.

    பல்வேறு அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். நிதிப் பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு செய்ய முடியாத நிலை உள்ளது.  அதற்காக மகளிர் உரிமை தொகையுடன் அதனை ஒப்பிட்டு பேசக் கூடாது.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை இருப்பதாக புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். அந்த பற்றாக்குறைக்கு காரணம், ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை தான்.

     கண்டிப்பாக அடுத்து ஆட்சிக்கு வரும் போது இந்த அரசு நிச்சயமாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும். ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட மாசு காரணமாக தோல் வியாதிகள் மண் வளமும், நீர் வளமும் எல்லாமே மாசுபடுகிறது என்பது குறித்து நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு வந்து முடிந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கிரீன் காப்பர் என்ற பெயரில் திரும்ப வர முயற்சிக்கின்றனர். கிரீன் காப்பர் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஒரு கெமிக்கல். அது எப்படி க்ரீனாக மாற முடியும்..? அது என்ன இலையா, தழையா..? 

    கிரீன் காப்பர் என்ற பெயரில் மீண்டும் ஆலையை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபோதும் தமிழ்நாடு அதற்கு அனுமதிக்காது. தமிழக முதல்வரும் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்குள் வர வாய்ப்பில்லை. 

    எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கும், கூட்டணிக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக தினந்தோறும் ஒரு அறிக்கை வெளியிடுவார். திமுக அரசு என்ன செய்துள்ளார்கள் என்பது ஒவ்வொரு மகளுக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்காக சொல்லும் அவதூறு 

    பிளாஸ்டிக் லைட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட போதிலும், உதிரிப் பாகங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்

    இதையும் படிங்க: திருச்சியை 2வது தலைநகரமாக்கனும்..! கனிமொழியிடம் முக்கிய கோரிக்கை மனு கொடுத்த துரை வைகோ..!

    மேலும் படிங்க
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    அரசியல்
    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    குற்றம்
    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share