ஈரோட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நல்லாட்சி நடத்தி வரக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற உங்கள் முன்னால் வாக்கு கேட்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில், கலைஞர் உரிமை திட்டம் மகளிர் விடியல் பயணம் என இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். யாரும் யூகிக்காத அளவில் காலை உணவு திட்டத்தை அறிவித்தார் புதுமைப்பெண், அன்புச்சோலை திட்டம் தோழி விடுதிகள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என பெண்களின் நலனை முன்னிறுத்தி அறிவித்த திட்டங்கள் அதிகம்.
மகளிர் நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார் முதலமைச்சர். 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் அற்புதமான திட்டம். நலன் காக்கும் அரசு 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு திட்டங்களை கொண்டு வந்துளளது. திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற இந்த அரசு மக்களின் பாதுகாப்பை வழங்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிர்ப்பு வரும் வகையில் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!
தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் எடுபிடியாக செயல்படுகிறது . நேற்று தலைமைச் செயலாளரை மாற்றி விட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு தனி செயலாளராக இருந்தவரை தலைமை செயலாளராக நியமித்துள்ளனர்.இது ஒரு சார்பான முடிவு மட்டுமல்ல ஒரு சாராருக்கு ஆதரவு செய்வதற்கான திட்டம்.
வாகன சோதனை செய்கின்ற அதிகாரிகள் வாகனங்களை சோதனை இடுகின்றார்கள். எனது வாகனங்களையும் சோதனை செய்தார்கள் இதனை வரவேற்கின்றேன் ஆனால் முதலமைச்சரின் வாகனத்தை முதல் நாளும் மறுநாளும் சோதனைக்கு உட்படுத்தினார்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் யாரையும் சோதனை செய்யலாம். நரேந்திர மோடி ஒன்றிய அரசை இயக்குகின்ற அவர் விமானத்தில் வருகிறார் அந்த விமானத்தில் என்ன கொண்டு வருகிறார் அதில் கோடி கோடியாய் பணம் இருக்கிறதா என யாருக்கும் தெரியாது. மோடி நகர்வலம் வருகிறார் அவருடைய காரை தடுத்து சோதனை நடத்துவீர்களா.?
அப்படி செய்தால் அனைவரையும் சமமாக நடத்துகிறீர்கள் என அர்த்தம். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். அவர் வாகனத்தை சோதனையிட தயாரா.?
உள்துறை அமைச்சருக்கு சொல்கின்றேன் ரத்தமும் கண்ணீரும் கட்டி எழுப்பிய திராவிட இயக்கம். இதனை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தையும் திமுகவையும் தேர்தலில் களம் கண்டு தோற்கடிக்க முயற்சிப்போம் என கூறுனால் அது ஜனநாயகம். உங்களுக்கு உள்ள அந்த உரிமையை அதில் குறை சொல்ல மாட்டேன். ஆனால் தந்தை பெரியாரும் பகுத்தறிவு பகலவன் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் கட்டி எழுப்பிய திராவிட இயக்கத்தை திராவிட முன்னேற்ற கழகத்தை அடியோடு ஒழித்து விடுவோம் என்று சொல்லக்கூடிய அகந்தையும் ஆணவமும் மண்டை செருக்கும் உள்துறை அமைச்சராக இருந்தால் அவ்வாறு சொல்ல உரிமை இருக்கிறதா..?
தியாகத்தால் எழுப்பப்பட்ட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை தகர்ப்பொம் என அமித்ஷாக்கள் கொக்கறித்த போது, தமிழ்நாட்டின் நலனுக்காக பல முறை போராடி இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என வடக்கில் இருந்து புறப்பட்டு வருபவர்களை தடுக்க வேண்டும். இதற்காகவே திமுகவுடன் கரம் கோர்த்துள்ளேன். தொகுதி எண்ணிக்கை நமக்கு முக்கியமல்ல. திமுக அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த கேள்வி...!! - “விஜய் வந்தா ஓட்டு போயிடும்...” - அடித்துச் சொன்ன அமித் ஷா...!