மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள MGR சிலையை நள்ளிரவில் சமூக விரோதிகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ளஅதிமுகவினர் 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
சிலையை சேதப்படுத்தியவர்களே கைது செய்யக்கோரி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எம் ஜி ஆர் சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் . சம்பவ இடத்திற்கு காவல் உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன் ஆய்வாளர் லிங்கப்பாண்டியன் பார்வையிட்டு சிசிடிவி கட்சிகளில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நம்பியவர்களை அனாதையாக்கியவர் TTV தினகரன்... ஆர்.பி உதயகுமார் பதிலடி...!
இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது. இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கறார் காட்டிய போலீஸ்... இபிஎஸ்-ன் நாளைய பிரச்சாரம் ரத்து...! ஏன் தெரியுமா?