பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது தமிழக கல்விக்கான நிதியைத் தராமல் பிளாக் மெயில் செய்து வருகிறது என விருதுநகரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்பு செய்தியார்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.,8 இல் நிறைவடைகிறது. பணியில் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் தான் பல மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களை உருவாக்கியுள்ளனர். எனவே, அனைத்து ஆசிரியர்களையும் விட்டு விடாமல், அவர்களை அரவணைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கப்படாமல் உள்ளதே என்ற கேள்விக்கு?, கட்டாய கல்வி உரிமைச் சட்டமானது, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகும். அச்சட்டப்படி பணத்தை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். இதற்கென மாநில அரசு 40சதவீதத்தை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை. ஆனால், அச்சட்டத்தை மதிக்காமல், ஒன்றிய பாஜக அரசானது, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.600 கோடியை தற்போது வரை வழங்கவில்லை. மேலும் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தினால் தான் கல்விக்கான நிதியை தருவோம் என கல்வித்துறையில் பிளாக் மெயில் செய்கின்றனர். மாணவச் செல்வங்களை காப்பாற்றாதவர்கள், எப்படி நாட்டைக் காப்பார்கள் என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு...!
2500ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. மீதமுள்ள 12500 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு எப்போது நடைபெறும். டி.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 3 முதல் 4 மாத கால அவகாசம் தேவைப்படும். இதில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றால் மேலும் காலதாமதம் ஆகும். எஸ்.என்.ஜி மூலம் ஆசிரியர் பற்றாக்குறையின்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குள் மீதமுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பதில் கூறினார்.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு?, ஆறு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் என்ற திட்டத்தின் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 9இலட்சத்து 80ஆயிரம் மாணவர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி கொடிகள், டீ ஷர்ட்...உலகப்புகழ் பெற்ற கோயில் திருவிழாவில் பரபரப்பு முடிவு...!