காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். ஒரு அரசு மக்களுக்கு தேவையான உணவு வழங்க வேண்டும். வருமானத்தின் மூலம் உடை தருகின்ற காரியத்தை செய்ய வேண்டும். மக்களை சிறந்த குடிமக்களாக மாற்ற வேண்டும் நோயற்ற வாழ்வை மக்கள் வாழ வேண்டும். அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த நோக்கத்தை தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார். அதனை மனதில் வைத்து பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,
ஓ பன்னீர்செல்வம் மற்றும் பிரேமலதா ஆகியோர் முதல்வரை சந்தித்தது கூட்டணிக்காக என பேசப்படுகிறது குறித்த கேள்விக்கு, கூட்டணி இல்லை முன்னணியும் இல்லை அவர்கள் தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என வந்து பார்த்தார்கள். அரசியல் பண்பாட்டோடு வந்து பார்த்தார்கள் என்றார்.
பல லட்சம் பேர் வடமாநிலத்தவர் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் வாக்காளர்களாக மாற்றப்பட உள்ளார்கள் இது எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இதுபோன்று நமது ஊரில் செய்ய முடியாது இது ஒரு கிரானிக்கல் பிராப்ளம் இதை தலைவர்கள் தான் அணுகுமுறை முறை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: அதுக்கு கூட வரமாட்டார்... விஜய்யை ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட துரைமுருகன்...!
இதுபோன்று வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக வரும்போது பிற்காலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கேள்விக்கு, நிச்சயமாக நீங்கள் சொல்லும் கருத்தை நான் ஒத்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: “எங்க கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” - திமுகவை பார்த்து நறுக் கேள்வி கேட்ட எடப்பாடி...!