வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கிவைத்தார். இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பெட்டிகளில் மனு வாங்கினார், முதல்வர் ஆனவுடன் அனைத்தும் குறைகள் தீர்க்கப்படும் என கூறினார் ஆனால் இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை ஏன் தொடங்கி வைக்கிறார் என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது போன்ற மனுக்கள் இப்போது வருகிறது அதற்காகத்தான் இந்த திட்டம் துவக்கி உள்ளார் என்றார். சேலத்தில் கலைஞர் கருணாநிதி சிலை மீது காலி பையன் கருப்பு மைய்யை ஊற்றியுள்ளான் என்றார்
இதையும் படிங்க: தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர் காமராஜர்.. தவெக தலைவர் விஜய் மரியாதை..!
நடிகர் ரஜினி தற்போது விழா ஒன்றில் கடந்த முறை விழா ஒன்றில் பேசிய போது முழுவதுமாக பேச மறந்து விட்டேன். சீனியர் அரசியல்வாதிகள் தான் தூண்கள் அவர்கள் சிகரம் என கடந்த விழாவில் சொல்ல வந்தேன் அதை மறந்து விட்டேன் எனக் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அதை நான் பார்த்தேன் அவருக்கு போன் செய்து பேசினேன் இப்போதாவது மறக்காமல் பேசினீர்களே நன்றி எனக் கூறினேன் என்றார்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி முடிவதற்கு முன்பு நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்யுங்கள் என பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, கேள்வி கேட்பதற்கு கூட சட்டசபைக்கு கூட வர மாட்டார் என்றார்.
இதையும் படிங்க: அம்மா ஷோபாவை வைத்து விஜய்க்கு பாஜக கட்டிய வலை... அமித் ஷாவின் ப்ளானை புட்டு புட்டு வைத்த அப்பாவு...!