திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சரவணனை சேத்துப்பட்டு கலைஞர் திடலில் ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அரசியல் கட்சிக்கு ஒரு நாகரிகம் உண்டு யார் எவராக இருந்தாலும், நாகரிகமாக பேசுவது காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அய்யா ராமதாஸ் குறைப்படுகிற அளவிற்கு இன்னைக்கு பொது மேடையில் ஒருமையில் பேசுகிற கட்சி எது என்றால், அது அன்புமணி கட்சி தான்.
பொது மேடையில் ஒருமையில் பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறார். இதை திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறோமா? யோசித்துப் பாருங்கள். ஆக நம்முடைய தலைவர் தமிழகத்தின் முதலமைச்சரின் என்று கூட பார்க்காமல் மேடையில் ஒருமையில் பேசுகிறவர் யார் என்று சொன்னால் அவர் தான் அன்புமணி, அதனால் தான் சொல்கிறேன் நம்மிடத்தில் துப்பாக்கியில் தோட்டாவை போட்டு வெடித்தாக வேண்டும். அது என்னவென்று சொன்னால் திமுக என்கிற துப்பாக்கி பிடித்து சரவணன் என்கிற தோட்டாவை போட்டு முடிக்கணும்.
இதுதான் நமக்கு இருக்கும் கடமை இந்த தொகுதியை பொருத்தவரைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற இயக்கம் நின்றுள்ளது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தோற்கடிப்பதற்கு நமக்கு கிடைத்திருக்கிற தொட்டா தான் அது சரவணன் என்று சொன்னால் மிகையாகாது. எனவே தோழமைக் கட்சிகள் பணியாற்றினாலும் கூட நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தனி அக்கறை உள்ளது. நம்முடைய தலைவரை ஒருமையில் பேசுகிற அந்த இயக்கத்தை போளூரில் படுமோசமாக தோற்கடிக்க வேண்டும் என்ற கடமை நமக்கு இருக்கிறது. எனவே கழக நண்பர்களே நிறுத்திக்கப்பட்டுள்ள வேட்பாளர் நம்முடைய வேட்பாளர் என்ற உணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: என்ன திமுக ஆதரவா? பொன்ராஜை அரெஸ்ட் பண்ணுங்க..! போர்க்கொடி தூக்கிய அன்புமணி..!!
ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். ஆனால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதுதான் அண்ணா நமக்கு வகுத்து தந்த பாடம் என பேசினார். நம்மை தலைவர் ஆணையிட்டு உள்ளார்கள். நம்மை நம்பி தான் இந்த தொகுதி சரவணன் அனுப்பி இருக்கிறார்கள். அவரை வெற்றி பெற வைப்பது உங்களது கடமை. எனவே அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலையாரை தரிசித்த சௌமியா அன்புமணி... மனமுருகி வழிபாடு..!!